Share this book with your friends

Yuga sandhayil viyuga vanigam / யூக சந்தையில் வியூக வணிகம் Thozhil nutpa aaivugal & varththaga viyugangal

Author Name: Sivagurunathan Govindhasamy | Format: Paperback | Genre : Business, Investing & Management | Other Details

பங்கு சந்தை வர்த்தகர்களுக்கான தொழில் நுட்ப வழிகாட்டி புத்தகம், எளிய தமிழில். தொழில் நுட்ப பகுப்பாய்வு குறிப்புகள், வர்த்தக வியூகங்கள், வர்த்தக செயல் மேலாண்மை மற்றும் ஆப்ஷன் வர்த்தக வியூகங்கள் உள்ளடக்கிய ஒரு முழுமையான வர்த்தக வழிகாட்டி. பங்கு சந்தையில் வெற்றி பெற விலை போக்கின் பின்னால் உள்ள வணிகர்களின் மந்தை மன நிலை பற்றிய முழுமையான புரிதல் வேண்டும். சாத்தியமான நிகழ்தகவுகளை புரிந்து வர்த்தகம் செய்ய தெளிவான வர்த்தக திட்டங்களும், வலுவான வியூக வணிக மன நிலையும் அவசியம் வேண்டும். அந்த வகையில் பங்கு சந்தைக்கு புதியவர்களுக்கும், சிறிது அனுபவம் உள்ள வர்த்தகர்களுக்கும் இந்த புத்தகம் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். தேவையான விளக்கக் குறிப்புகளும், சமீபத்திய விளக்கப் படங்களும் தரப்பட்டுள்ளது. பங்கு சந்தை வர்த்தகர்களுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்ப பகுதிகளும் உள்ளடக்கிய ஒரு எளிய தமிழ் புத்தகம்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சிவகுருநாதன் கோவிந்தசாமி

பெயர்: சிவகுருநாதன் கோவிந்தசாமி

ஊர்: மயிலாடுதுறை, தமிழ்நாடு

கல்வி: முதுகலை - உயிர் அறிவியல்

கல்லூரி காலத்திற்கு பின், 1991 ல் திரு. கோ. நம்மாழ்வார் தலைமையிலான குடும்பம் என்ற தொண்டு நிறுவனத்தில், அவருடன் சேர்ந்து இயற்கை வேளாண்மை, சுற்று சூழல், நீடித்த வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை பற்றி எனது எழுத்துப் பணியை தொடங்கினேன். 3 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் உண்டு. சத்தீஸ்கர், ஒரிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு வணிகம் செய்த அனுபவத்திற்கு பிறகு உடல் நலக்குறைவால் தமிழகம் திரும்ப நேரிட்டது. அது முதல் தொடந்து பங்கு சந்தையில் ஈடுபட்டு வருகிறேன். உடல் ஊனமடைந்ததால் அலைந்து சம்ப்பதிக்க வாய்ப்பில்லை. பங்கு சந்தை முழுமையாக இணைய வழியில் இயங்க தொடங்கிய காலம். பங்கு சந்தையில் நுழைந்தேன். என்ன ஏது என்று தெறிவதற்குள்ளாகவே பெரும் பணத்தை இழந்தேன். அதன்பின் அதைப் பற்றி முழுமையாக தெறிந்து கொள்ள வேண்டும் என்ற வெறி பிறந்தது. நிறைய படித்தேன். எனக்கு நிறைய நேரம் இருந்தது. படித்ததை பயிற்சி செய்து ஆய்ந்தேன்.  என் 20 வருட அனுபவத்தில் நான் படித்தது, கணித்தது, பட்டது என பங்கு சந்தையில் எனக்கு தெறிந்த அனைத்தையும் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற என் ஆர்வம் இப்போழ்து நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. சந்தையில் என் ஆரம்ப காலங்களில் தமிழில் ஒரு நல்ல தொழில் நுட்ப புத்தகத்திற்காக நான் நிறைய தேடிப்  பார்த்தேன். அப்போழ்து கிடைக்கவில்லை. இப்போழ்தும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் நிறைய சமூக வளர்ச்சி சார்ந்த விசயங்களை பற்றி எழுதியிருந்தாலும் வணிக நோக்கில் எழுதப் பட்ட முதல் நூல் எனக்கு இதுதான்.

Read More...

Achievements

+1 more
View All