தமிழகத்தின் சேலம் வட்டாரக் கிறிஸ்தவ வரலாற்றை உங்கள் கரங்களில் தவழும் நூல் வாயிலாக திரு. ஜே. பர்னபாஸ் அவர்கள் வெளிக்கொணர்ந்திருப்பது பெரும்பாராட்டுக்குரியது என்பது மிகையன்று. ஆங்கில ஆவணக்காப்பேடுகளில் இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள் அநேகம் இருப்பினும், அவைகள் பாமரக் கிறிஸ்தவர்களுக்கு சென்று அடைவதில் பெரிய இடைவெளி இருப்பதை யாரும் மறுத்தல் இயலாது. இந்த குறைவினை திரு. பர்னபாஸ் அவர்கள் பெருமளவுக்கு நீக்கியுள்ளார் என்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.
1971 - ஆம் ஆண்டு முதல், தென்னிந்திய திருச்சபையின் ஆயராக ஏற்காட்டில் நான் பொறுப்பேற்றது முதற்கொண்டு என்னுடைய கிறிஸ்தவ வரலாற்று பயணம் துவங்குகிறது. பின்னாண்டுகளில் திரு. பர்னபாஸ் அவர்களின் முன்னோர்களிடையே சேலம் அஸ்தம்பட்டி ஆலயத்தில் பணியாற்றிய நாட்கள் முதற்கொண்டு, திரு. பர்னபாஸ் அவர்களை அவர்தம் பள்ளிப் பருவம் தொட்டு அறிந்துள்ளேன். கிறிஸ்தவ வரலாற்றில் ஊக்கம் கொண்டு அதனை நிறைவான முறையில் பேணி வரும் அவருடைய அணுகுமுறைகளுக்கும், கிறிஸ்தவ வரலாற்று வரைவியலில் அவருடைய சீஷத்துவமான ஈடுபாட்டுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners