“கர்த்தருக்குச் சித்தம்,” என்ற தலைப்பினை வைத்து, Rev. Dr. A. பிரகாசம் ஐயா அவர்கள், உங்களுக்குச் சில ஆழ்ந்த எண்ணங்களைப் பகிர்ந்துக் கொடுத்ததை தொகுத்து வழங்க எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்திற்காக, நம் தேவாதி தேவனையும், கர்த்தாதி கர்த்தரையும் ஸ்தோத்தரிக்கிறேன். நம் வாழ்வின் ஒவ்வொரு நினைவும், செயலும், கர்த்தரின் சித்தத்திற்குக் கீழ் இயங்கும் போது மட்டுமே, நாம் உண்மையான திசையில் பயணிக்கிறோம் என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் கர்த்தரின் சித்தத்தில் நடக்கும் போது மட்டுமே உண்மையான நல்வாழ்வைக் காணலாம். கர்த்தரின் சித்தம் நம் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்று ஜெபித்து, அவர் மேல் உண்மையான விசுவாசம் வைத்து, அவர் காட்டும் வழியில் நடந்து, அவர் நமக்காக வைத்திருக்கும் சிறந்த திட்டத்தை அனுபவிக்க, செயல்படடும் போது, நிச்சயமாக ஜீவக் கிரீடத்தைப் பெற்றுக் கொள்வோம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. Rev. Dr. A. பிரகாசம் ஐயா அவர்களின் ” கர்த்தருக்குச் சித்தம்” என்ற இந்த புத்தகம் கர்த்தரின் சித்தம் என்னவென்று புரிய வைத்து, உங்கள் மனக் கண்களைத் திறந்து, சீர்படுத்தி நல்வழிப்படுத்தும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று. இதை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாததால், நீங்கள் பெற்ற ஆசீர்வாதத்தை, மற்றவர்களும் அடையும்படி, இதை அனேகருக்குப் பகிர்ந்து, உங்களால் முடிந்த வரை தேவனுக்கென்று ஒரு சிறிய ஊழியத்தை இங்கிருந்து துவங்க உங்களை அன்போடு அழைக்கிறேன். கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!
Rev. ஆலிஸ் நிர்மலா