வணக்கம், தமிழ் கவித்துவம் என்னும் மாளிகைக்கு அனைவரையும் வரவேற்கிறோம். இனிய வரிகளால் கொடிய எண்ணங்களை கவித்துவம் மூலம் அழித்துக் கொள்ளுதல் மனித இயல்பு. எத்தகைய துன்பமாயினும், அதிலிருந்து மீட்டெடுக்கவோ, ஆறுதல் பெறவோ மொழி நல்ல தீர்வு. மொழிக்கு, வெறும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பயன் மட்டுமன்றி, பல்வேறு பயன்கள் உள்ளன, அவற்றுள் சிறந்த பயனானது கவித்துவம் ஆகும். கவிஞர்களுக்கு தான் கவித்துவம் பொருட்டாகாது, உள்ளம் உடைய அனைவரும் கவித்துவம் படைக்கலாம், படிக்கலாம் , பாடலாம், எழுதலாம்.
எளிய முறையில், மொழியில், பெரிதாக இலக்கண மரபுகள் அல்லாமல், மிகவும் சிறந்த சுலபமான முறையில் இயற்ற பட்ட செய்யுள்களின் தொகுப்பு தான் ‘மனதின் முனைகள்’. இந்நூலை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி, வாசித்து மகிழ்க!