Share this book with your friends

Inaindha Ulagam / இணைந்த உலகம்

Author Name: Sathish Rajamohan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒரு கற்பனை உலகில் மூன்று தேசங்கள். இவை புவியியல் காரணங்களால் தனித்திருக்கின்றன. இம்மூன்று தேசங்களும் பெரும் மாறுதலுக்கு தயாராகின்றன. ஆனால் இந்த மாறுதல் வன்முறை தவிர்த்து மென்புரட்சியின் மூலமாக அடையப்படுகிறது. பிற தேசங்களுடன் வர்த்தகத்தொடர்பு, கருத்து  மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் இந்த மென்புரட்சியின் அஸ்திவாரம்.  இணைந்த  உலகமே மானுட சமூகத்தின் துயர் களைய ஏற்ற வழி என்பதை இந்த நாவல் வலியுறுத்துகிறது.

இக்கருத்தை தத்துவம், அறிவியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளின் துணையுடன் நிறுவுகிறது. நாவலில் மேல் நாட்டு தத்துவ விவாதங்கள் காணப்பட்டாலும், இந்திய தத்துவ நோக்கி இந்நாவலுக்கு அடிப்படை. மேலும் இந்நாவல் அறிவியலை மட்டும் ஆராயமல் அறிவியலின் தத்துவத்தை தனது கதைமாந்தர்களின் வழியாக அலசுகிறது. 

இந்நாவல் தமிழில் இது வரை கையாளப்படாத கதைக்களனை கொண்டுள்ளது. அதனால் வாசகருக்கு இனிய வாசிப்பனுபவம் கொடுப்பதாகவும் உள்ளது.

Read More...
Paperback
Paperback 380

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சத்திஷ் ராஜமோகன்

இந்நாவலின் ஆசிரியர் சத்திஷ் ராஜமோகன் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் கணினித்துறையில் பணியாற்றுகிறார். இவர் 2013ல் அறிவியல் சிறுகதைகள் எழுதுவதன் மூலம் தன் எழுத்துப் பயணத்தை தொடங்கினார். கல்கி, சுஜாதா போன்று வித்தியாசமாக, ஜனரஞ்சக பாணியில் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெயமோகன், தஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய் , ஐசாக் அசிமோவ் இவரின் ஆதர்சங்கள். ஆனால் இவர்களின் பாதிப்பு தனது எழுத்தில் தெரியாவண்ணம் இவரின் கதைக்களம் மற்றும் கதை கூறும் முறை அமைந்திருக்கிறது.

புதிய அனுபவங்கள், கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம் தேவை என்பது ஆசிரியரின் வாழ்க்கை நெறி. அது அவர் எழுத்திலும் தெளிவாக புலப்படுகிறது.

இணைந்த உலகம் சத்திஷ் எழுதிய முதல் நாவல். தான் இது வரை எழுதியதிலிருந்து முற்றிலும் மாறான ஒரு எழுத்து முறையை ஆசிரியர் கையாண்டிருக்கிறார்.  பல அறிவுத்துறைகளின் கருத்துக்கள் விவாதங்கள் கொண்ட இந்நாவல் வாசகர்களை மகிழ்விப்பது உறுதி.

Read More...

Achievements