Share this book with your friends

INDIA'S FOREIGN POLICY / இந்திய அயல்நாட்டு கொள்கை

Author Name: K.Senthilkumar, R. Krishnan, K. Nithila | Format: Paperback | Genre : History & Politics | Other Details

இந்தியா என்கிற நன்னெறியானது உலக அளவிலே அமைதிக்கான ஆளுமையாக
உள்ளது என்றால் அது மிகையாகாது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பிரிவுகளாக
இருந்த நிலப் பிரிவினையானது ஒன்று சேர்க்கப்பட்டு “வேற்றுமையில் ஒற்றுமை”
என்கிற பண்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சீரான பாதையில் செயல்படுகிறது
இந்தியா.இதே பண்பானது இந்திய அயல்நாட்டு கொள்கையிலும் நாம் சீர்தூக்கி
பார்க்கலாம்.பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் நேபால் ஆகட்டும் அல்லது
அமெரிக்கா ரஷ்யா பிரான்ஸ் பிரிட்டன் ஆகட்டும் அத்தனை நாடுகளுடன் பரஸ்பர
நல்லுறவை மேம்படுத்தி வந்துள்ள ஒரே நாடு இந்தியாவாக தான் இருக்கும்.
அயல்நாடுகள் அத்துனையுமே பல்வேறு பிரச்சனைகளில் அமைதியை இழந்து
தவிக்கிற பொழுது இந்திய நாடானது ஜனநாயக கொள்கையிலே சிறிதளவும்
வழுவாமல் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.கொரோனா-19
காலகட்டங்களில் இந்தியாவின் மருந்துதவியானது “பார்மசி ஆப் த வேர்ல்ட்” என்கிற
பேரன்பிற்குரிய பட்டத்தை இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளது.அதேபோல உலக
அமைதிக்காக இதுவரை செயல்பட்ட 70க்கும் மேற்பட்ட ஐக்கிய நாட்டு சபை அமைதி
காக்கும் படைகளில் 40க்கும் அதிகமான நாடுகளில் தன்னுடைய ராணுவத்தை
அனுப்பி அமைதி நிலையை மீட்டெடுத்தது இந்தியா.கலாச்சாரம் பண்பாடு
பாரம்பரியம் மொழி போன்ற அத்தனை அம்சங்களிலும் பழமை வாய்ந்த இந்திய
நாடானது வல்லரசாவதற்கு தகுதியைப் பெற்றிருந்தாலும் நல்லரசாக இருப்பதற்கே
விரும்புகிறது என்பதை அதன் வெளியுறவு கொள்கையிலிருந்து தெரிந்து
கொள்ளலாம்.இப்படைப்பானது இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கையையும்
உறவுகளையும் எடுத்தியம்பும் ஒரு முயற்சியாகும்.போட்டி தேர்வுகளுக்கும் ஏனைய
பல்கலைக்கழக கல்லூரி தேர்வுகளுக்கும் கண்டிப்பாக உதவும் என நம்பப்படுகிறது.

Read More...
Paperback
Paperback 385

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

கு.செந்தில்குமார், ர.கிருஷ்ணன், கண்ணன்.நித்திலா

முனைவர்.கு.செந்தில்குமார் அழகப்பா பல்கலைகழகத்தில் அரசியல் & பொது நிர்வாக துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்ச்சி அளித்து கொண்டிருக்கிறார்.பல ஆராய்ச்சி கட்டுரைகளை பன்னாட்டளவில் பிரசுரித்த இவர் சமீபத்தில் ஜோஹன்னஸ்பர்க் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்துள்ளார்.இவருடைய சமீபத்திய வெளியீடு நவீன அரசியல் பகுப்பாய்வு ஆகும்.பன்னாட்டு உறவுகள்,மனித உரிமைகள் போன்ற பிரத்யோக பாடங்களில் தற்ச்சமயம் கவனம் செலுத்தி வருகிறார்.

முனைவர் ர.கிருஷ்ணன் இந்திய மக்களின் வாக்களிப்பு நடத்தை,நாசிக் பற்றிய தலைப்பில் முனைவர் பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில் பெற்றுள்ளார்.மும்பையில் தொழில் துறையில் பணியாற்றி கொண்டு இருக்கின்ற இவருக்கு எழுத்தின் மீதும் ஆராய்ச்சியின் மீதும் தீராத ஆர்வம் உள்ளதால் பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி உள்ளார்.இந்திய நாட்டின் வளர்ச்சியின் மீது தீராத நம்பிக்கை கொண்டவர். இது இவருடைய முதல் படைப்பாகும்.

முனைவர்  நித்திலாகண்ணன்,தற்சமயம் சேலம் அரசு கலை கல்லூரியில் கௌரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.எம்.ஏ மற்றும்  எம்.பி.ஏபட்டத்தினை அண்ணாமலை பல்கலைகழகத்தின் மூலமாக பெற்றுள்ளார்.பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலமாக சேலம் மாவட்டத்தில் உள்ள  சுய உதவி குழுக்களின் வாயிலாக பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் முனைவர் பட்டம்பெற்றுள்ளார்.பத்துக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் தனது ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.இவரின் சமீபத்திய பிரசுரிப்பு “நவீன அரசியல் பகுப்பாய்வு” ஆகும்.

 

Read More...

Achievements

+9 more
View All