Share this book with your friends

Irulil Oli / இருளில் ஒளி

Author Name: Arvind Kumar | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

ஆட்டிஸ நிலையாளரான அரவிந்த் குமாரால் பேச முடியாது.  ஆனாலும் பலதரப்பட்ட பார்வையாளர்களின் கேள்வி பதிலுக்கு கம்ப்யூட்டரில் டைப் செய்து பதில் அளிப்பதன் மூலம் அனைவரிடமும் தொடர்பு கொள்ள விரும்பினார்.

பலதரப்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. ஆழ்ந்த  தத்துவம், நகைச்சுவை, ’எனக்குத் தெரியாது” என்று பதிலளிக்கும் குழந்தைத்தனமான பதில்கள் என பல வகையான பதில்கள் அவை.

இப்புத்தக வெளியீட்டில் பேசிய அனைத்து முக்கிய பேச்சாளர்களும் ஒட்டு மொத்தமாக சொன்னது “அரவிந்தின் புத்தகம் ஒரு மேதையின் புத்தகம்!” என்று.

ஒரு ஆட்டிஸ நிலையாளரின் மன நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இப்புத்தகம் என்னும் ஜன்னல் வழியே சமுதாயம் எட்டிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். சமுதாயம் இவர்களைப் புரிந்து கொள்வதற்கும் சமுதாயத்தில் இவர்களை இணைத்துக் கொள்வதற்குமான சிந்தனையைப் புகுத்தவும் இப்புத்தகம் வழிவகுக்கும் என்று நம்பிக்கை பிறக்கிறது.

 

Read More...
Paperback
Paperback 249

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அரவிந்த் குமார்

அரவிந்த் குமார், பேச்சற்ற, சமுதாயத்துடன் பழக முடியாத ஆட்டிஸ நிலையாளர். வழக்கத்திற்கு மாறான முறையில் தானே பயின்று 5 வயதிலிருந்தே கம்ப்யூட்டரில் டைப் செய்து தன் எண்ணங்களைத் தேவைகளைப் பகிர்ந்து வந்தான்.  மிக விரைவிலேயே அவன் தனது குறிப்பிடத் தக்க  ஆங்கிலப் புலமையையும் பல் வேறு விஷயங்களில் எழுதுவதின் மூலம் வெளிப் படுத்தினான்.

சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியான “குருகுலம்” எனும் பள்ளியில் இப்போது பயின்று வருகிறான்.  அரவிந்தை  gurukulam2019@gmail.com  என்ற இந்த ஈ மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

Read More...

Achievements