Share this book with your friends

Jeevakarunya Ozhukkam / ஜீவகாருண்ய ஒழுக்கம்

Author Name: Ramalinga Adigalar | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் இந்நூல் கிடைத்தற்கு மிகவும் அரிது. இதில் ஜீவகாருண்யத்தை உலகோர்க்கு எடுத்து சொன்ன வள்ளல் பெருமானார் அதை எவ்வாறு கடைப்பிடிப்பதென்பதையும் அதன் நெறியும் ஆழ் ஞானத்தையும் உரையாக விளக்கக் கூறுகிறார்.


தென்றல் இதழ் இந்நூலை அனைத்து மக்களும் படிக்கும் வண்ணம் இணையத்தில் நூலாக வெளியிட்டுள்ளது. வள்ளல் பெருமானார் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோலென்றும் அதன் பேறென்பதே உலகோர் தேகத்தை ஆலயமாக எண்ணி அவர்களின் குறைகளை இயன்றவகையில் தீர்பதுவும் எல்லா உயிரும் இன்புற்று வாழ்தலையே தனது சுகமாக கொள்ள வேண்டும் என்பதையும் இறை வழிபாட்டிற்கு நிகராக வலியுறுத்துகிறார்.


அதன்வகையில் இந்நூலினால் கிடைக்கும் தொகையானது மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பொருட்டு இன்றளவும் இயங்கும் வள்ளல் பெருமானின் சத்திய தரும சாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.


அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இராமலிங்க அடிகளார்

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (Ramalinga Swamigal) (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.[2] திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.

சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்

Read More...

Achievements

+2 more
View All