Share this book with your friends

Kalangiya Kangal / கலங்கிய கண்கள்

Author Name: S. Ramesh | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

“கலங்கிய கண்கள்” எனும் தலைப்பில் என் தாயார் என் பொருட்டு செய்த தியாகத்திற்கு காணிக்கையாக இந்த நாவலை படைத்துள்ளேன். அவள் என் மேல் கொண்ட அளவிலா பாசம், அன்பு இவைகளை வார்த்தைகளால் வடிவமைக்க முயற்சி செய்துள்ளேன். இந்த நாவலில் படிப்போர் மனதில் பெற்றோரை பத்திரப்படுத்த வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக உணர செய்துள்ளேன்.

நான் என் தாயுடன் பயணித்த அனுபவங்களை எழுத்தாக்கி “கலங்கிய கண்கள்” எனும் தலைப்பில் அர்ப்பணித்துள்ளேன். இந்நாவல் படிப்போர் அனைவரையும் உருக வைக்கும். கல் நெஞ்சையும் கறைய வைக்கும். இந்த நாவல் “கலங்கிய கண்கள்” யாரையும் அழ வைப்பதற்காக படைக்கவில்லை. பெற்றோரை தொழ வைப்பதற்காகவே சமர்ப்பிக்கிறேன்.

தாய்மையின் மாண்பினை உணர்த்தும் வகையில் இந்த நாவலை அற்புதமாய் வெளியிட முயற்சி செய்துள்ளேன். இன்றைய தலைமுறையினர் படித்து பந்தம், பாசம் என்பதை உணர்ந்து கொள்ள மிக சிறந்த நாவலாகும்.

மிக சிறந்த பாச படைப்பினை கொண்ட இந்த நாவல் என்றுமுள இன்தமிழரிய வாசகர் மனதில் தங்கி நிற்கும். எந்த சூழ்நிலைகளிலும் பெற்றோரை கைவிடுதல் கூடாது அதுவே நம்மை போற்றி வளர்த்து சிறப்பித்தவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதான் என்னும் கருத்தை ஆழமாக பதித்துள்ளேன்.

படியுங்கள்! பெற்றோர் மலரடி வணங்குங்கள்.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சு. ரமேஷ்

கவிக்குயில் கரந்தை வை. சுந்தரம் அவர்களின் மைந்தன் சு. ரமேஷ் அனைவருக்கும் என் அன்பான இனிய வணக்கம். நான் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருச்சி மாவட்டம் லால்குடி டவுனில் பிறந்தேன். குடும்ப வறுமை காரணமாக 12-ம் வகுப்பு வரைதான் படிக்க இயன்றது. மேற்கொண்டு 1978 ஆம் ஆண்டு வேலை தேடி டெல்லி மாநகரத்திற்கு வந்தேன். அதிர்ஷ்டவசமாக 1979-ஆம் ஆண்டு P&T டிபார்ட்மெண்ட்டில் (இப்ப பி.எஸ்.என்.எல்) தேர்வு செய்யபட்டு பணியில் அமர்ந்தேன்.

1983 ஆம் ஆண்டு சுதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு புதல்வர்களுக்கு (ஸ்ரீ மகேஷ், ஸ்ரீ ஸ்ரீகாந்த்) தந்தையானேன். 38 வருடங்கள் தொலைபேசி நிறுவனத்தில் அயராது பணியாற்றிவிட்டு, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.எஸ்.என்.எல் என்ற நிறுவனத்திலிருந்து கணக்கு அதிகாரியாக ஓய்வு பெற்றேன்.

என் மனைவி ஸ்ரீமதி சுதா, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாம் அலையில் பலியானாள். அவள் மறைவுக்கு பின் நான் என்னை தமிழ் பணியில் அர்ப்பணித்துக் கொண்டேன். இந்த முயற்சியில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற செண்பக தமிழ் அரங்கின் பொறுப்பாளர் திருவாளர் இராச. இளங்கோ அவர்களின் நட்பு கிடைக்க பெற்று என்னை தமிழ் தொண்டில் இணைத்துக் கொண்டேன். எஞ்சிய வாழ்வில் தமிழை வளர்க்க தொண்டு செய்ய ஆர்வமாக உள்ளேன்.

தங்கள் அன்புள்ள ஆசிரியர்

சு. ரமேஷ்

 

Read More...

Achievements