Share this book with your friends

Karai / கறை "நீளும் இரவினுள் பதில்களையும் புத்துயிர்ப்பையும் தேடி ஒரு பயணம்…" / Neelum iravinul badhilgalaiyum puththuyirppaiyum thedi oru payanam

Author Name: Gautam Narayanan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இயற்கையால் வீழ்த்தப்பட்ட மனிதனுக்கு அதன் பின் மிஞ்சுவது இரண்டே முகங்கள் தான். ஒன்று, தீரா பேரன்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் முகம். மற்றொன்று, பெரும் கோபத்தையும் வன்மத்தையும் வெளிப்படுத்தும் முகம். வீழ்த்தப்பட்ட மனிதன் எந்த முகத்தை அணிகிறான் என்பது அவனுள் இருக்கும் அகந்தையின் அளவு சார்ந்தது.

அறுபது வயது நீலகண்ட பிள்ளை ஒரு நாள் இயற்கையால் வீழ்த்தப்படுகிறார், அல்லது வீழ்த்தப்பட்டதாக உணர்கிறார். வேறு வழியின்றி, தான் வீழ்த்தப்பட்டவன் என்பதைப் பிறரிடம் இருந்தும் தன்னிடம் இருந்தும் மறைக்கும் முயற்சியாக ஒரு முகத்தை அல்லது முகமூடியை அணிந்து கொள்கிறார். அம்முயற்சியில் தோல்வியைத் தழுவுகிறார்.

ஒழிந்தோம், வீழ்ந்தோம் என்று தன் மனமே தன்னைக் கைவிடும் நேரத்தில் அதன் கதவைத் தட்டுகிறது காமம் எனும் உயிர்த்தெழுப்பும்  உணர்ச்சி. அவர் கதவைத் திறந்தாரா?  உயிர்த்தெழுந்தாரா? உயிர்த்தெழுந்தால் எழப்போவது அவதரித்த அரக்கனா? அல்லது கிறிஸ்துவா?

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌதம் நாராயணன்

கௌதம் நாராயணன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக எழுதி வருகிறார்.சுமார் நாற்பது சிறு கதைகளை எழுதியுள்ளார். ஆங்கில மொழியில் "சோனியா°என்னும் நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். "கறை"என்னும் இந்நாவல்("stain"in english) இவர் தமிழில் எழுதிய முதல் நாவல் ஆகும். இவர் கதைகளை எழுதுவது மட்டுமில்லாமல் சினிமா துறையில் திரைக்கதை எழுதுவதிலும் மிகவும் ஆர்வம் உள்ளவர். சில குறும்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் தனியாகவும் திரைக்கதைகளை எழுதி வைத்துள்ளார். இந்த எழுத்தாளரின் "கறை" நாவலை படித்து அதற்கான கருத்துக்களையும் விமர்சனங்களையும் கீழுள்ள டிவிட்டர் பக்கத்திற்கு அனுப்பவும் (Gautam_writes).

Read More...

Achievements

+5 more
View All