Share this book with your friends

Pavazhamalli / பவழமல்லி

Author Name: V. Anantha Narayanan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

'யக்ஞம்' குறுநாவல் பற்றி இலக்கியவாதி நகுலனின் பாராட்டு: (கணையாழி, ஜூலை 1984).

இந்த நாவல் பற்றி யாரும் குறிப்பிடாமல் இருந்து விடக்கூடாது, இது கவனத்துக்கு வரவேண்டிய நாவல் என்பதற்கே இதை எழுதுகிறேன். தகவல்களை - தகவல்கள் என்ற தன்மையிலேயே கொடுத்துவிட்டு (இங்கு நான் அசோகமித்திரனின் பாதிப்பைக் காண்கிறேன்) அதிலிருந்து ஒரு மேல் அல்லது அடித்தளத்திற்கு நாவல் செல்கிறது. இது நவீன இலக்கியத்தின் சிறப்புத் தன்மையாகக் காணப்படுகிறது. 'யக்ஞம்' என்ற தலைப்பும், கிச்சாவின் 'இந்தக் கிளாசில் பாதிப் பேருக்கு மேல் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாக இருப்பார்களென்று அவனுக்குத் தோன்றியது' என்ற வாக்கியமும் இதைச் சாத்தியமாகச் செய்கின்றது. ஒரு முழுக் கட்டுரை எழுதப்படும் அளவுக்கு இந்த நாவலின் சிறப்பு அமைந்திருக்கிறது. 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

வெ. அனந்த நாராயணன்

வெ. அனந்த நாராயணன் தமிழில் பிரசுரமான எழுத்தாளர். கணையாழி மற்றும் திண்ணை, பொன்னி, ஆனந்தவிகடன், சாவி பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெ. அனந்த நாராயணன், வெங்கட் நாராயணன், நந்து, டெக்ஸன் என்ற பெயர்களில் வெளியாகியுள்ளன. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் தவிர, இவரது பல கவிதைகளும், அமெரிக்கா பற்றிய கட்டுரைகளும் கூட பிரசுரமாகியுள்ளன. .

கடந்த நாற்பது வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.  கணினி நிபுணராக பணியாற்றி வருகிறார். Quora போன்ற தளங்களில் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். இதிலுள்ள கதைகளை ஆங்கிலத்தில் தானே மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகம் 'Yagnam and other stories' என்ற தலைப்பில் அமேசானில் கிடைக்கிறது..

Read More...

Achievements