Share this book with your friends

Pen viduthalai / பெண் விடுதலை THE WOMENS'S LIBERATION

Author Name: M.sabeena Bahurudeen | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பெண்விடுதலை என்ற இந்த நூல்முற்றிலும் பெண்மைப்பற்றியே பேசக்கூடியவையாக எழுதியுள்ளார் கவிஞர் சபினாபகுருதீன், பெண்களுக்கு நடக்கும் அவலங்கள், உலகில் பல இடங்களில் பல பெண்களுக்கு நேரும் அநியாயங்கள் கொடுமைகள் அவர்களின் இலக்கிற்கு தடை வகுதலென்று பல்வேறு நெகிழ்வுகளை அவரது மனம் நெகிழ்ந்தே குறிப்பிட்டுள்ளார் .
பெண்கள் என்ற பெயருக்கு அர்த்தம் அறிந்தவர்உண்டோர் இங்கு ?அவர்கள் வெறும் காட்சி தரும் பொருளாகவே தெரியப்படுகிறார்களா சில ஆண்களுக்கு ? இன்னும் சில ஆண்கள் அவர்களது இல்லாள் 
மேல் தாக்குதல் நடத்தக்கூட தயங்குவதில்லை, ஒரு பெண்ணை அடிப்பதற்கான உரிமையை யார் அவர்களுக்கு வழங்கியது ? அவர்கள் உங்களுக்கு அமானிதம் என்று நீங்கள் அறியவில்லையா இதற்கெல்லாம் காரணம்தான் என்ன ? இன்று பல வீடுகளில் இதுதானே நடந்து கொண்டிருக்கிறது, பல ஆண்கள் இன்று தவறான பாதையில் போவதற்கான காரணம்தான் என்ன ......
இன்னும் பல இடங்களில் அவர்கள் இல்லாளை அடிமையாக நடத்தப்பட்டு வருகிறார்கள்,பெண் அமைதியானவள் என்பதற்காக அடிமைத்தனத்தை கையாளுகிறார்களா? ஆணுக்கு போல் பெண்ணிற்கும் சிந்தனைகளிலும் வீட்டு பொறுகளிலும் சட்ட உரிமைகளிலும் சம உரிமைகள் உள்ளது என்பதை பல ஆண்கள் அறியவில்லையா, காலம் காலமாக பேசப்படும் பெண் அடிமைத்தனத்தை அடியோடு அழித்திடவே இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறார் இல்லை பல பெண்களின் கண்ணீர்துளிமைகொண்டுசெதுக்கப்பட்டுள்ளார்... 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சபினா பகுருதீன்

எல்லா புகழும் இறைவனுக்கே
ஆசிரியரை பற்றி சிறு தொகுப்பு

சபீ ஒரு எழுத்தாளர், கவிஞர், இணை ஆசிரியராய் பல தொகுப்புகளின் வாயிலாய் அறியப்பட்டவர், மற்றும் அமேசான் தளத்தில் புத்தகங்கள் வெளியிட்டும், கூடுதலாய் நோசன் பிரஸ், அமேசான் கின்டில் ஆகிய பொதுவெளியில் வெளியீட்டாளராயும்,
தொகுப்பாளராகவும் திகழ்பவர். மற்றும் இணையவழி மூலமாக சமுக சிந்தனைகளை உணர்த்தும் கதை,கவிதை,கட்டுரை போன்று பல போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டு அதிலும் வெற்றிப்பெற்று பல சான்றுகள் பெற்றிருக்கிறார்,
புதுக்கோட்டைமாவட்டம்அம்மாபட்டினம்
கிராமத்தை சேர்ந்த இவர், உலகமே போற்றிடும் மேதை திரு. அப்துல் கலாம் ஜயா அவர்கள் சுவாசித்த அதே காற்றையும் மண்ணையும் தமதாகக்கொண்டவர், அவரது அருகாமை கிராமத்திலேயே வசிக்கும் தனிப்பெருமை கொண்டவர். இவரது பெருங்கனவு தன் எழுத்துக்களின்மூலம் மாற்றங்கள் கொணர்வது,
அதுவும் மிகமிக சிறிய வயதிலேயே துவங்கிவிட்டது இவரது எழுத்துப்பணி. இன்று இவர் பல எல்லைகளைக்கடந்து தனது எழுத்தால் பயணிக்கிறார். நேரான பாதையில், வாய்மையின் திறத்தில், இயற்க்கையின் இருப்பில், இறைவனின் அனுகூலத்தில்,
உண்மையை உயர்த்திப்பிடிக்கிறார் வரிகளில், உரிமைகளை உரக்கப்பேசுகிறார். இவரது குறிக்கோள், பலதரப்பட்ட தளங்களில் பயணித்து பதிவுகளை நிலைபெறச்செய்வதே. இறை அருளால் எழுதுகோலையே தனதான ஆயுதமாய் கைக்கொள்கிறார். 

Read More...

Achievements

+1 more
View All