Share this book with your friends

Project AK / ப்ராஜக்ட் ஃ Historical fiction

Author Name: Kava Kamz | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ப்ராஜக்ட் ஃ' நாவலைத் தழுவிய 'ழகரம்' திரைப்படம் ஏப்ரல் 12, 2019 இல் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தற்போது அமேசன் ப்ரைமிலும் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. நாவலைப் பற்றிய கிழக்கு பதிப்பக ஆசிரியர் குழுவின் குறிப்பு - "ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் விறுவிறுப்பையும் இதில் ஒருவர் அனுபவிக்கமுடியும். இன்றைய கார்ப்பரேட் யுகத்தையும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையையும் மையமாகக் கொண்டிருக்கும் அதே சமயம், ஆச்சரியமூட்டும் இடங்களில் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத வரலாற்று விநோதங்களைச் சாமர்த்தியமாக அறிமுகப்படுத்துகிறது. ஒரு பக்கம், நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புதிர்ப் பயணம் பின்னோக்கி நிகழ்கிறது. இன்னொரு பக்கம் எதிர்காலத்தை நோக்கி ஒரு மாபெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்படுகிறது. எதிரும் புதிருமான இந்த இரு பயணங்களும் தொட்டுக்கொள்ளும் இடம் சுவாரஸ்யமானது. புதுமைக்கும் பழமைக்கும் முடிச்சுப்போடும் இத்தகைய இடங்கள் நாவலை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடுகின்றன. அறிவியல் புனைக்கதைத் துறையில் இந்நாவல் குறிப்பிடத்தக்க ஓரிடத்தைப் பிடிக்கப்போவது உறுதி. சிலிர்க்கவைக்கும் புதியதோர் அனுபவத்துக்குத் தயாராகுங்கள்.

Read More...
Paperback
Paperback 305

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவா கம்ஸ்

கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்த இவர் ஆறு ஆண்டுகள் பொறியாளராகப் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்து பொழுதுபோக்காக கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வந்த இவருக்கு இந்நாவல், இவர் உலகிற்கு அளிக்கும் முதல் படைப்பாகும்.

Read More...

Achievements

+2 more
View All