இந்நூல் மூலப்பொருட்களின் மேலாண்மையானது, மூலப்பொருளின் தன்மையைப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. நம்மை சூழுந்துள்ள முழு சுற்றுச்சூழலிலும் இயற்கை வளத்திலும் மூலப்பொருள் என்பவை எவ்வாறு பங்கு கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஏதுவாக பல்வெவ்வேறு மாதிரிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக விளக்குக்கின்றது. மூலப்பொருட்களை வளங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது? அம்மூலப்பொருட்களின் பல்வேறு கூறுகள், அதன் செயல்பாடு மற்றும் ஒரு நிறுவனத்தில் அதன் மூலப்பொருளின் பங்கு ஆகியவற்றைக் எடுத்துரைக்கின்றது. மேலும் ஒரு நிறுவனம் அதன் இயக்கச் செயல்பாட்டில் உட்படுத்தக் கூடியதான மூலப்பொருட்களின் அளவு மற்றும் தரத்தை வெவ்வேறு சூழ்நிலைகளில், எவ்வாறு தேர்வு செய்தல், மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பலதரப்பட்ட சூழல்களை ஆய்ந்தும் கூறுகின்றது. ஓர் நிறுவனம் அதன் உற்பத்தி அல்லது சேவைக்கான பணிச் செயல்முறைகளில் அதன் மூலப்பொருளை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கு தேவையான அளவுகோல்களையும் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.