Share this book with your friends

Vedic Anatomy - Tamil / வேதங்களில் உடற்கூறியல்

Author Name: Chockalingam Pragasam, B.B.A, F.C.A. | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

பண்டைய இந்தியர்கள் முதலில் பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் எனும் இயற்கையை நேசித்தனர். இது அவர்களின் ஒரு வாழ்க்கை முறையாகக் கருதப்பட்டது. காலப்போக்கில் நூற்றுக்கணக்கான சிலைகளும் தெய்வங்களும் வேத நூல்கள் மூலம் உருவாயின. மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான புராணக் கதைகள் படைக்கப்பட்டன. இந்த சிலைகள் மற்றும் தெய்வங்கள் யார்? அவைகள் என்ன? அவர்கள் கடவுள்களா அல்லது வேறு ஏதாவதா? அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள்? 

மனித உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் ஒவ்வொரு கடவுளாக பாவிக்கப்பட்டு, மனிதனாக உருவகப்படுத்தி உருவாக்கப்பட்டவைகளே புராணக் கதைகள். இவற்றுள் இராமாயணமும் மகாபாரதமும் அடங்கும்.  

ஒவ்வொரு மனித உறுப்புக்களும் ஒரு கடவுளாக உருவகப்படுத்தி வணங்கப்படும்போது ஒவ்வொரு மனிதனும் ஒட்டு மொத்த கடவுள்களின் மூட்டையே. கடவுள்களை கடவுள்களே மதிக்கும்பொழுது. மனிதர்களை மனிதர்கள் மதிக்கட்டுமே.

எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்டு வந்தாள் சாவித்திரி என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சத்தியவான் என்பது, சாத்திய + வனம் = கருப்பை என்றும், சாவித்திரி என்பது, சா + வித்து + திரி = தொப்புள்கொடி என்றும், இது கரு இரத்த சுழற்சி பற்றிய உருவகக் கதை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.  

சதி எனும் உடன் கட்டை ஏறுதல், “கணவனை இழந்தவர்களுக்கு பூவும் பொட்டும் எதற்கு? இது போல பல கதைகளை இங்கே இந்நூல் விளக்குகிறது.  

Read More...
Paperback
Paperback 850

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சொக்கலிங்கம் பிரகாசம், B.B.A, F.C.A.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஒரு பட்டய கணக்காளர் ஆவார், அவர் 1920 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் குறித்த ஒரு கட்டுரையை உருவாக்க தனது மகளுக்கு உதவ முடிவு செய்தார். இது இந்த நாகரிகத்தின் பாதையை ஆராய்வதில் அவரது கவனத்தை ஈர்த்தது. அதை இந்தியர்களின் தற்போதைய சாதி, சமயம், மதம், கலை, கலாச்சாரம், மற்றும் பாரம்பரிய மரபுகளின் நிலைமையுடன் ஒப்பிட்டார். சமுதாயத்தின் பல இழி நிலைகளுக்கு வேத நூல்களின் தவறான புரிதலே காரணம் என்று புரிந்து கொண்டார். இந்த தவற்றை இந்த புத்தகத்தின் மூலம் நீக்க முயற்சிக்கிறார்.

Read More...

Achievements

+6 more
View All