காயத்ரி தமிழனின் 'கான்கிரீட் பறவைகள்' நிழல் உலகில் நிஜத்தை தொலைத்த தருணத்தை எட்டிப் பார்க்க விழைகிறது! மேலும் நாம் நாமாகவே மனிதநேயத்தோடு இருக்க அழைக்கிறது!
பல நேரங்களில் எனக்கு எதுவும் தெரிவதில்லை. இங்கே பக்கங்களை புரட்டிப் பார்க்கையில் உங்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது. என்னிடம் கேள்விகளும் குழப்பங்களுமே நிறைய இருக்கின்றன. எனக்கு தெரிந்த பிரச்சனைகளை சொல்கிறேனே தவிர அவற்றிற்கு தீர்வாக நானேதும் சொல்லிவிடவில்லை. என்னிடம் பதில்கள் இல்லை. தேடிக் கொண்டிருக்கிறேன். விடைகளை மட்டுமல்ல என்னையும் பல சமயங்களில் தேட வேண்டியதாயிருக்கிறது. என்றாவது எங்காவது எனக்கான விடயங்களுடன் என்னையும் கண்டுக் கொள்வேன் என்ற நம்பிக்கையில் தடயங்களை விட்டு போகிறேன். இந்த தொகுப்பும் அப்படியான ஒன்றுதான்.