எங்கிருந்து வந்தாயோ
வணக்கம்,
இது எனது ஆறாம் நாவல். தாய் இல்லா நாயகன். அவனுக்கு அன்பு தராதா சித்தி, நாயகனின் அன்பு மனைவியும் பிரசவத்தில் அவனை பிரிந்து செல்ல , தன் உயிரின் துளியான மகளோடு தனியே தவிக்கிறான்.நாயகனை கண்ட நொடி முதல் காதல் வயப்பட்டு அவனை இரண்டு வருடம் தேடி அவனை சேர்கிறாள். அங்கு அவனோ அவளை ஏற்கும் நிலையில் இல்லை. இரண்டாம் திருமணம் என்பது எளிதா? சித்தியின் அன்பும் இல்லாது வளர்ந்த நாயகன் அவன் மகளுக்கு நாயகியை சித்தியாக சம்மதிப்பான? உறுதி கொண்ட காதலி காதலில் நாயகனோடு சேர்ந்தாளா ? நாயகன் அவளின் காதல் புரிந்து ஏற்று கொண்டானா ? அறிய வேண்டுமா ? வாசித்து பாருங்கள் .
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு மணிச்சட்ட ஆசிரியை, கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். நன்றி.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி
கௌரி முத்துகிருஷ்ணன்.