உலக மக்கள் அனைவரும் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையில் தங்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதல்களை 1330 இரண்டு வரி கவிதைகளில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த வள்ளவ பெருந்தகை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். வெளியிடப்பட்டுள்ள அனைத்து நன்நெறி கருத்துக்களும் உலகை படைத்த ஆதி இறைவனின் வழிகாட்டுதல்கள்படியே எழுதப்பட்டவையாக நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இறைவனின் வழிகாட்டுதல்களை ஒவ்வொரு சாதரண மனிதரும் அவரது உணர்வு திறனால் தெரிந்து கொள்ள இயலாது. ஒவ்வொருவரும் தவறான முன் கனிப்புடன் தங்களது வாழ்க்கை செயல்பாடுகளை பயன் தராத வகையில் மாற்றி அமைத்து இது தான் சரியான வாழ்கை என பயன் தராத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். எனவே ஆதி இறைவன் வகுத்துள்ள நன்நெறிகளை புரிந்து கொண்டு இறைவன் வகுத்து தந்துள்ள சரியான வழிகளில் வாழ்வதற்கான எல்லா விளக்கங்களும் தற்கால பேச்சு வழக்கில் உள்ள மொழியில் எழுதப்பட்டுள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners