என் பெயர் பிரவீணா தங்கராஜ். கணவர் பெயர் தங்கராஜ். எனக்கு இரு குழந்தைகள் இருக்கின்றார்கள். சென்னையில் வசிப்பவள். தமிழ் இலக்கியம் பயின்று கவிதை கதை எழுதும் சிறு எழுத்தாளினி. இதுவரை 68 நாவல்களுக்குமேல் எழுதியுள்ளேன். அதில் காதல் குடும்பம், உறவு, நட்பு, பெண்களை முன்னிறுத்தி மையமாகவும், திகில் நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் அடங்கியன. எனது கதைகளின் பட்டியலும், சுட்டிகளும் அறிந்திட Praveenathangaraj.blogspot.com என்ற தளத்தில் காணலாம். மேலும் ராணி முத்து நாளிதழில் பிரம்மனின் கிறுக்கல்கள் என்ற நாவலும் ஜூன் 16, 2022 வெளியாகி உலகத்திற்கு என்னை அடையாளப்படுத்தியது.