Share this book with your friends

orumaiyiyal kotpaadu / ஒருமையியல் கோட்பாடு Pudhiya ariviyal padhippu

Author Name: PRABHAKARAN NATESAN | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

தற்கால அறிவியலில், பொதுச் சார்பியல் கோட்பாடு மற்றும் குவாண்டம் இயக்கவியல் ஆகியன, இரண்டு பெரும் இயற்பியல் பாடப் பிரிவுகளாக உள்ளன. அவை இரண்டிற்கும் இடையேயான முரண்பாடு என்பது விஞ்ஞான உலகில், கடந்த நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு  சவாலாகும். ஒருமையியல் கோட்பாடு, அவை இரண்டும் எவ்வாறு இணைகிறது என்ற நுணுக்கத்தை கண்டறிந்து  இயற்கையில் இயற்பியலுக்கான ஒரு அடிப்படைக் கல்வியாக அமைகிறது. இந்தப் புதிய பாடத் தொகுப்பு, வான்வெளி அறிவியலுக்கான முக்கிய விடயங்களாக இருக்கும், இட-கால ஊடகம், ஈர்ப்பியல், கருந்துளை மற்றும் அணுவியல் ஆகிய நான்கையும்  இணைத்து புள்ளியளவில் விளக்குகிறது. உண்மையில் சார்பியலுக்கும் அணுவியலுக்கும் இடையே எந்த முரண்பாடு இல்லை என்பதை ஒருமை கண்ணோட்டத்தில், வரைபட விளக்கங்களோடு காட்சிப்படுத்துகிறது. அதனோடு, இட-கால பரிமாணங்கள் மொத்தம் எத்தனை, ஊடகம் என்பதே எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்பதாக வரையறுத்தும் கூறுகிறது. விஞ்ஞானத்தில் அறியப்படாத மர்மமாக இருக்கும் கருந்துளை பற்றிய முழுமையான விடயங்களையும், ஈர்ப்பியலுக்கான அனைத்து நுணுக்கங்களையும் தெளிவாக விளக்குகிறது. ஒருமையியல் கோட்பாடு  ஒரு வழக்கமானஆராய்ச்சியாக இல்லாமல்  முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் தொகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கத்து. அது ஐன்ஸ்டீன் அவர்களின் நீளம் சுருங்குதல் மற்றும் நேரம் விரிவடைதல் ஆகிய கவனிப்புகளின், அவரே ஆராயத் தவறிய உண்மை தன்மையை வெளிக் கொணர்த்து அதன் தொடர்ச்சியாக ஒருமைப் புள்ளி வரையிலான ஆழமானப்  பாடத்தை வகுத்துள்ளது.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 475

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரபாகரன் நடேசன்

அன்பார்ந்த தமிழ் மக்களுக்கு வணக்கம், உண்மையில் எம் வாழ்வில் கல்விக்கான ஒரு பங்களிப்பைத் தர நிர்பந்தம் ஏற்படும் என்று கனவிலும் நினைத்ததில்லை. பள்ளியில் சுமாராகப் படித்த ஒரு மாணவன் தான். ஆனால் எம் பெற்றோருக்குக் கல்வி சார்ந்த விடயங்கள் மிகவும் பிடிக்கும். முதன்மை மதிப்பெண்கள் பெறும் பிள்ளைகளைக் கண்டு மனம் நெகிழ்வார்கள். ஆனால் எமக்கு எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் விளையாட்டே கதி என்று ஆனந்தமாய் இருந்தோம். சக மாணவ நண்பர்கள் படிப்பைத் தவிரவும் வேறு விதங்களில் திறமைகள் கொண்டிருந்தனர். அவர்கள், அனைவரும் விரும்பும் சமர்த்துப் பிள்ளைகளாகவும், தான் அது போல் இல்லை என்பதை தானே உணர்ந்து இருந்தோம். தமிழ் பாடம் பள்ளிப் பருவம் முடியும் வரை ஆறுதலாய் அமைந்தது. அது தவிர அவ்வப்போது இயற்பியல் பாடத்தில் ஆர்வம் இருந்தது, புரிந்து படிக்க முடிந்தது, ஆனாலும் அது சிந்தனைகளில் மூழ்கவே வழிவகுத்தது, பரீட்சைக்கு உதவவில்லை. உடன் படிப்பவர்களும், அதற்கு மேல் வகுப்பு மாணவர்களும் ஐன்ஸ்டீன் அவர்களின் காலம் விரிவடைதல் பற்றி பேசும் போது, காது கொடுத்து கேட்போம், இயற்கையின் காலம் என்பதும் கடிகார நேரம் என்பதும் ஒன்றல்ல என்பதை தனக்குள் கூறிக்கொண்டோம், விவாதித்ததில்லை, காரணம் இதெல்லாம் நன்றாகப் பேசு ஆனால் மதிபெண்களில் ஒன்றும் காணோம் என்ற ஏசுதல் பற்றிய பயம். வகுப்புகளை குறைந்தபட்ச மதிப்பெண்கள் கொண்டே கடந்து வந்தோம். கல்லூரியில் இயற்பியல் துறையில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்தும், சூழ்நிலை ஒருமனதாக இருக்கவிடாமல், ஒன்றரை ஆண்டோடு இளங்கலை இயற்பியல் படிப்பைப் பாதியில் கைவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தோம். பிற்காலத்திலும்,  பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இல்லாமல் போக, தனிமையில் தியானம் பயின்றோம். வாசி யோகம் என்ற முறையில், தியானத்தின் உச்சமாக இருக்கும் 'வாசி-நடனம்' என்ற இட-கால ஊடகத்தின் ஆழத்தில் உள்ள விட்டு விட்டு ஏற்படும் துடிப்பினை புருவ மத்தியில் கண்டோம்.  அது 'குவாண்டா' என்ற சொல்லால், ஆற்றல் என்பது தொடர்ச்சியானது அல்ல, அது சிறு துணுக்குகளாக (அ) பொட்டலங்களாகவே இருக்கின்றது என்று 1900 ஆம் ஆண்டில் 'மேக்ஸ் பிளாங்க்' என்ற விஞ்ஞானி கண்டறிந்து கூறியதாகும். இந்த சொல் விஞ்ஞான உலகில் அறிமுகப்படுத்தப்பட்டு  நூறு ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் 'வாசி-நடனம்' என்பது யுகம் யுகமாக தமிழ் சித்தர்கள் தம் நூல்களில் கூறப்பட்டுள்ள விடயமாகும். மேலும், பாரத தேசத்தில் அறிவியல் என்பது கலை வடிவில் இருப்பதை உணர்ந்து, வரைபடங்களைக் கொண்டே இட-கால பரிமாணங்களை வெளிப்படுத்தி இந்த ஒருமையியல் பாடத்தை வகுத்துள்ளோம்.  இந்தப் புத்தகம் ஆழமான நுணுக்கங்களைக் கொண்டு தனித்துவமாக இருப்பதை வாசிப்பவர் நிச்சயம் உணருவார்...நன்றி.

Read More...

Achievements

+1 more
View All