தேடல் இல்லையென்றால் மகிழ்ச்சி இல்லை. அரூப சத்தத்தில், அர்த்தசாம நள்ளிரவில், கடுங்காட்டில், தன்னந்தனி ஒற்றை சிறுவழியில் , எல்லா இடங்களிலும் அப்பி கிடக்கிறது ஒரு ஏகாந்த பேராற்றல் . அள்ளி எடுக்க கைகள் போதவில்லை. ஒற்றை நாணயத்தை தொலைத்து விட்டு, வழி நெடுக தேடி கொண்டிருக்கும் ஏழை தகப்பனை போல், பேரின்பம் தேடி ஒரு சிறு பயணம். இல்லாத இடத்தை விட்டு, இருக்கும் இடம் தேடி தாகத்தோடு ஒரு நகர்வு. புரியாத புதிர்களை அவிழ்க்கும் நோக்கத்தில், பேராற்றல் நிரம்பிய இறைவனின் கருவறைகளை நோக்கி நமது பயணம் தொடங்குகிறது.