Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
ஆறுமுகன் கடவுளர்களின் கடவுள். முருகா என்று அவன் நாமத்தை உச்சரித்தாலே பக்தன் மனம் பரவசமடையும். எத்திசை நோக்கி வேண்டுமானாலும் வணங்கலாம் அவன் எங்குமிருக்கிறான். கந்தன்
ஆறுமுகன் கடவுளர்களின் கடவுள். முருகா என்று அவன் நாமத்தை உச்சரித்தாலே பக்தன் மனம் பரவசமடையும். எத்திசை நோக்கி வேண்டுமானாலும் வணங்கலாம் அவன் எங்குமிருக்கிறான். கந்தன் தமிழில் வைதாரையும் வாழவைப்பான். காடு மலைகளில் முனிவர்கள் தேடி அலைவது தத்துவப்பொருளான முருகனைத்தான். முருகன் பரப்பிரம்மம், இந்தப் பிரபஞ்சத்துக்கே அதிபதி. அவன் அழைக்காமல் தானாக யாரும் பழனி செல்ல முடியாது, வேலனைக் காண வேளை வரவேண்டும். சத்தியத்தின் வழி நடப்பவர்கள் அவனிடம் சரணடைந்துதான் ஆகவேண்டும். தெய்வக்குழந்தை கிரகங்களையெல்லாம் பளிங்கு போல் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அக்குழந்தைக்கு. அடியவர்களுக்கு அடியெடுத்துக் கொடுத்து தமிழில் பாடச் சொல்லிக் கேட்கும். பக்தனுக்கு ஏதாவது ஒன்றென்றால் தான் கடவுள் என்பதைக்கூட அக்குழந்தை மறந்துவிடும். ஆதியில் இருந்தே முருகக்குழந்தை இங்கு தான் இருந்து வருகிறது. பிறவா நிலையை அடைந்தவர்களை அக்குழந்தைதான் மேலுலகங்களுக்கு அழைத்துச் செல்லும்.
பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்
பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்கும். திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால் அகக்கண்களும் குருடானவன் என்கிறார். நீதியை துரியோதனனுக்கு எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ள திருதராஷ்டிரன் சகுனி காய் உருட்டுகையில் என் மகன் ஜெயித்தானா ஜெயித்தானா என்று பேராவல் கொண்டு கேட்கிறான். பாஞ்சாலி அவையில் துகிலுரியப்பட்டபோது பீஷ்மரின் பேச்சு அறத்தை முன்னிறுத்துவதாக இல்லை. துரியோதனாதியர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். தருமர் தன்னையே பணயம் வைத்து இழந்த பிறகு என்னைப் பணயம் வைப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது திரெளபதியின் இந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே படுகிறது. பீஷ்மர் எழுந்து நின்று பேசுகிறார் தருமன் அடிமைப்பட்ட பிறகு தருமனின் மனைவியும் அடிமையாகிவிடுகிறாள் என்ன ஒரு நீதி பார்த்தீர்களா? அவருடைய அன்றைய பேச்சில் சாணக்யத்தனமும் இல்லை சத்தியமும் தென்படவில்லை. பீஷ்மர் திரெளபதியின் மீது இரக்கம் கொள்ளாததற்கு அவர் பெண்ணினத்தையே வெறுத்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
மரணமே வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. நாளையைப் பற்றி நம்மால் முடிவு செய்ய முடியாது. வாழ்க்கை விடுகதைக்கு விடை தேடத்தான் நாம் இங்கு பிறந்திருக்கிறோம். இயற்கை நம் இருப்பை
மரணமே வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. நாளையைப் பற்றி நம்மால் முடிவு செய்ய முடியாது. வாழ்க்கை விடுகதைக்கு விடை தேடத்தான் நாம் இங்கு பிறந்திருக்கிறோம். இயற்கை நம் இருப்பை ஏற்றுக்கொள்ளும்வரை தான் நாம் இங்கு வாழ முடியும். பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறாத வேத நூல்களே இல்லை. வாழ்க்கை கடலில் ஜென் எனும் பாய்மரத்தை விரித்து கரையை அடைந்துவிடலாம். உலகமெனும் சேற்றிலிருந்து ஜென் நீர்ப்பூவாக உயர்ந்து நிற்கிறது. ஜென் மரணத்தை மையப்படுத்துகிறது. மரணத்தைப் பற்றிய சிந்தனையே நமக்கு ஞானத்தை வழங்குகிறது. பகலும் இரவும் ஒரே மாதிரியாக கடந்து செல்கிறது. நடக்கும் செயல்கள் வெவ்வேறாக இருக்கிறது. பூமி எனும் சிக்கலான இயந்திரத்திலிருந்து ஜென் விடுதலை தருகிறது. புத்தர் முயற்சியைக் கைவிட்டதும் ஞானம் அடைந்ததைப் போல. வானத்திலிருந்து மழைத்துளி பூமியை வந்தடையும் நேரம் கூட ஆகாது நீ ஞானமடைய என்கிறது. ஜென் மரணத்தை வாழ்க்கையின் ஒருபகுதி என்கிறது. ஜென் வாழ்வை நாம் கொண்டாடுவது போல மரணத்தையும் கொண்டாட வேண்டும் என்கிறது. புல், பூண்டுகள் வாழ்வின் மகத்துவம் அறியாதவை. உலகில் பிரவேசிக்கும் மனிதன் தனக்கு அடுத்து வரும் சந்ததியினர் தம்மைப் பற்றி பேசுமளவுக்கு காரியம் செய்திருக்க வேண்டும். இல்லையேல் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கும் அவனுக்கும எந்த வித்தியாசம் இல்லை.
காதலைப் பற்றி நாம் எழுதுவதெல்லாம் காற்றை சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும். கடவுளை அறிய முடியாது உணரத்தான் முடியும் என்பது போல. காதல் ஒரு உணர்வு. பட்டாம்பூச்சி சிறகடித்துப
காதலைப் பற்றி நாம் எழுதுவதெல்லாம் காற்றை சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும். கடவுளை அறிய முடியாது உணரத்தான் முடியும் என்பது போல. காதல் ஒரு உணர்வு. பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கிறது அந்த அழகை நாம் ரசிக்கலாம் ஆனால் அதை அடைய முயற்சிக்கக் கூடாது. இயற்கை தான் பெண்ணாக, மலராக, நதியாக, கடலாக உருவெடுத்து நம் முன் வேடிக்கை காட்டுகிறது. பிரிவின் போது கசியும் கண்ணீர்த்துளிகள் தான் காதலை புனிதப்படுத்துகிறது. காதல் நமக்கு சிறகை தருகிறது வானை அளக்க ஆனாலும் பலபேர் தாழத்தான் பறக்கிறோம். விடியல் உறக்கமற்றதாக விடிகிறது, உன்மத்தமாக இருப்பதால் பசி மறக்கிறது. இப்படி உன்னையே அசைத்துப் பார்க்கும் காதலைப் பற்றி நீங்கள அறிந்து கொள்ள வேண்டாமா. அதற்கு நீங்கள் காதலித்துப் பாருங்கள். அன்பின் மகத்துவத்தில் நீங்கள் ஆட்கொள்ளப் படுவீர்கள்.
தோற்றவர்களின் காதல் வரலாறு ஆகிறது. காதலின் சின்னமாக கல்லறையே இருக்கிறது. நிராகரிக்கப்பட்டவனின் ஆன்மா இந்தப் பூமியையே சுற்றிச் சுற்றி வருகிறது. அவளது பார்வைக்கு எத்தனை மகத்துவம் என்பது கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்பவனுக்குத் தான் தெரியும். இப்பூமியில் புனிதம் கெடாத ஒன்று உண்டென்றால் அது காதல் தான். மனித வாழ்வில் உன்னதமான தருணம் காதல் வயப்படுவதே. காதலின் மகத்துவத்தை வர்ணிக்க அகராதியில் வார்த்தைகளே கிடையாது. காதல் நதியில் மூழ்கியவர்கள் நிச்சயமாக கரை சேருவார்கள். இத்தொகுதி பாதிக்குமேல் காதலைப் பற்றியே பாடுகிறது. படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
இந்த இரவு துக்ககரமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. உடலை மறந்து என் ஆன்மா வானவெளியில் சுதந்திரமாக பறந்து திரிகிறது. விலங்கிடப்பட்டிருக்கும் நான் விடுதலையாகும் நாளை எதிர்
இந்த இரவு துக்ககரமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. உடலை மறந்து என் ஆன்மா வானவெளியில் சுதந்திரமாக பறந்து திரிகிறது. விலங்கிடப்பட்டிருக்கும் நான் விடுதலையாகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். சிறைக்கூடத்தை சுவர்க்கம் எனக் கருதும் உங்களால் கடைசிவரை பத்மவியூகத்தை உடைத்து வெளியேற முடியாது.
வாழ்க்கையின் வலியும், வேதனையும் நம்மை மரணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. பால்யத்தில் பெற்றிருந்த சிறகுகளை சமூகம் பறித்துக் கொள்கிறது. ஒவ்வொரு விடியலும் துயரச் சிலுவ
வாழ்க்கையின் வலியும், வேதனையும் நம்மை மரணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. பால்யத்தில் பெற்றிருந்த சிறகுகளை சமூகம் பறித்துக் கொள்கிறது. ஒவ்வொரு விடியலும் துயரச் சிலுவையை பரிசளிக்கிறது. வாழ்க்கையில் எப்போது வசந்தம் வீசும் என்று முள்படுக்கையில் படுத்தபடி யோசிக்கிறேன். வாழும் வரை வலையில் சிக்கிய மீன்களாகத்தான் இருக்க வேண்டியதை எண்ணி நான் நாட்களை கடத்துகிறேன்.
இந்த வாழ்வு மனிதனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்கிறது. ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் போது மனிதன் துயரப்படுக்கையில் விழுகிறான். நம்பிக்கை விதைகள் ஒருநாள் முளைவ
இந்த வாழ்வு மனிதனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்கிறது. ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் போது மனிதன் துயரப்படுக்கையில் விழுகிறான். நம்பிக்கை விதைகள் ஒருநாள் முளைவிடும் என்பது மனிதனின் கனவு தான். ஆயுள் முழுவதும் எதிர் நீச்சல் அடித்துக் கொண்டிருக்க மனிதனால் முடியாது. வாலிபத்தில் சுவர்க்கமாக தெரிந்த உலகத்தில் போகப் போக நரக இருள் கவிகிறது. மனிதன் தான் ஒரு பாவப்பிறவி என்பதை உணர்கிறான். அவனுக்கு மன்னிப்பு தேவையாய் இருக்கிறது. உயிர்களெல்லாம் பிறப்பு இறப்பு என்ற இரு எல்லைகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உடலின் தேவையை பூர்த்தி செய்வதால் தொடர்ந்து துன்பத்தையே பரிசாகப் பெறுகிறோம். வாழ்வின் அர்த்தத்தைத் தேடியவர்களின் முடிவு கொடுமையானதாகவே அமைந்துள்ளது. உண்மையின் வழியைப் பின்பற்றுபவர்கள் சொற்பமெனினும் அவர்களுக்கு எதன் தரிசனம் கிடைத்ததென்று தெரியவில்லை. முடிவு விடுதலையளிக்கும் என்பதால் தான் மனிதன் துயரங்களைப் பொறுத்துக் கொள்கிறான். கடவுளின் அகதரிசனம் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் குறைவு தான். அற்பமான சுகத்தை அனுபவிக்கும் ஆசைதான் மனிதனை வலையில் சிக்க வைக்கிறது. பாவிகளின் கூடாரத்தில் யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர். கடவுள் நிழல் கூட விழாத கைவிடப்பட்ட இவ்வுலகத்தில் மீட்பு சாத்தியமில்லாதது. உடலுக்குள் சிறையிருப்பது மரணத்திற்குப் பின் விடுதலை பெறுகிறது. அதுவும் சிறிது காலமே, பிறகு அது பிறவி சுழற்சியில் சிக்கிக் கொள்கிறது. விதி ஒன்று இந்த உலகில் செயல்படுவதாக நீங்கள் எப்போதேனும் உணர்ந்து கொண்டால் அதுவே கடவுள்.
பால்யத்தில் வானம் ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருக்கும். எல்லோரும் முழுநிலவை பார்த்தவாறு ஒரு கவளம் உணவையாவது விழுங்சி இருப்போம் அல்லவா? நமது முன்னோர்கள் கடவுள் வானத்தில் இ
பால்யத்தில் வானம் ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருக்கும். எல்லோரும் முழுநிலவை பார்த்தவாறு ஒரு கவளம் உணவையாவது விழுங்சி இருப்போம் அல்லவா? நமது முன்னோர்கள் கடவுள் வானத்தில் இருக்கிறார் என்று தானே சொல்லிக் கொடுத்துள்ளனர். இந்தப் பூமியில் நடப்பதற்கு சாட்சியாக வானம் தானே இருக்கிறது. பெளர்ணமி நிலவின் ஈர்ப்பு விசையால் தான் மன எழுச்சி அதிகரிக்கிறது இல்லையா? கிரகங்கள் மனிதர்களை பொம்மையாகத் தானே ஆட்டுவிக்கிறது. கலக்கத்தில் இருக்கும்போது வானத்தைப் பார்த்துக் கொள்வேன் பால்யத்தில் தெரிந்த ஏதாவதொன்று அகப்படுகிறதா என்று.
குறுகிய காலகட்டத்தில் எழுதப்பட்டவை இக்கதைகள். காதல், பிரிவு, தோல்வி, ஏக்கம் இவைகளால் பாதிப்படையாத மனிதனே இல்லை. ஒரு சதவீத இன்பத்துக்காக தொண்ணூற்று ஒன்பது சதவீத துயரங்களை
குறுகிய காலகட்டத்தில் எழுதப்பட்டவை இக்கதைகள். காதல், பிரிவு, தோல்வி, ஏக்கம் இவைகளால் பாதிப்படையாத மனிதனே இல்லை. ஒரு சதவீத இன்பத்துக்காக தொண்ணூற்று ஒன்பது சதவீத துயரங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. வாழ்க்கையின் நெருக்குதல்கள் மனிதனை நிம்மதியாக உறங்க விடுவதில்லை. தோன்றும் கனவுகள் கூட அனாதையாகத்தான் அவனை அலையவைக்கின்றன. அவனுக்கான வாழ்க்கையை யாரோ நிர்ணயிப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மைதானத்தில் உதைபடும் பந்தாய் அவனை இங்குமங்குமாய் அலைக்கழிக்கிறது இந்தச் சமூகம். உள்ளவன் முன்பு இல்லாதவன் பொம்மை தானா? சிரித்துப் பேசுபவர்களெல்லாம் உதவி என்று கேட்டு நிற்கும்போது உதாசீனப் படுத்துவதை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அவனுடைய முதுகின் மீது கால் வைத்து முன்னுக்கு வந்தவர்களெல்லாம் அவனை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. வல்லமை உள்ளதே பிழைக்கும் என்பது இந்த உலக இயக்கத்தைப் பொறுத்தவரை உறுதியாகின்றது. கைவிடப்பட்டவர்களுக்கு வாழ்க்கை சிலுவையாகத்தான் கனக்கிறது. வசந்தகாலம் வருவதற்கான அறிகுறிகளை இன்று வரை காணமுடியவில்லை. அந்தகாரம் கவிந்த இவ்வுலகில் அவன் விடுதலை அளிக்கும் ஒன்றாக மரணத்தை நினைப்பது தவறா?
கைவிடப்பட்ட குமாரரர்களுக்கு மரணமே பரிசாக கிடைத்தது. இறைமகனுக்கே எந்த வாக்குறுதியும் தராமல் தான் பூமிக்கு அனுப்பிவைத்தார் இறைவன். விண்ணரசு என்பதை இன்றும் கூட நாம் தவறாகத்
கைவிடப்பட்ட குமாரரர்களுக்கு மரணமே பரிசாக கிடைத்தது. இறைமகனுக்கே எந்த வாக்குறுதியும் தராமல் தான் பூமிக்கு அனுப்பிவைத்தார் இறைவன். விண்ணரசு என்பதை இன்றும் கூட நாம் தவறாகத்தான் புரிந்து கொள்கிறோம். பூலோக ராஜ்ஜியம் மட்டுமே மனிதர்களுடையது. அன்று யூதர்களின் ராஜாவானவர் இன்று உலகிற்கே ராஜாவானார். நபிகளை மெக்காவிலிருந்து கல்வீசித் துரத்தியவர்களெல்லாம் இன்று எங்கே சென்றார்கள். உலகிற்கே மறுமலர்ச்சி ஏற்படுத்திய புத்தரை அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் தூற்றத்தானே செய்தார்கள். மக்களுக்கு பாவத்தை மன்னிப்பதற்கு மட்டுமே கடவுள் தேவையாய் இருக்கிறார். வான மண்டலத்திலிருந்து இனி யாரும் இறங்கி வரப்போவதில்லை நீங்கள் என்ன செய்வீர்கள். இந்த பூமித்தடாகத்தில் இயேசு, புத்தர், நபி போன்ற வெண்தாமரைகள் அவ்வப்போது மலரத்தானே செய்கிறது. உங்களை அனுப்பினவரை விசுவாசிக்க மனமில்லாதவராகத்தானே இருக்கிறீர்கள். அதிமனிதன் தோன்றி உங்களுக்கு அழைப்பு விடுத்த போதெல்லாம் நீங்கள் தூங்கிவிட்டீர்கள். அவர்களின் சொற்களில் வெளிப்பட்ட உண்மை உங்களைக் கோபம் கொள்ளச் செய்தது. சுவர்க்கத்தின் திறவுகோலை அவர்கள் வைத்திருந்தனர். நீங்களோ அவர்களைத் துரத்தியடிப்பதிலேயே குறியாய் இருந்தீர்கள். எத்தனையோ மீட்பர்கள் வந்து சென்று விட்டார்கள். பூமியிலிருந்து தப்பித்து அடைக்கலம் தேடுவோரின் மீது இரக்கம் கொண்டு மெசியா விண்ணுலகில் அழுது கொண்டிருக்கிறார். இதோ ஒரு அறைகூவல் விடுக்கிறேன் சுவர்க்கத்திலிருந்து விரட்டப்பட்டது போன மனித இனம் பூமியிலிருந்து விரட்டப்படும் நாள் வெகுதொலைவிலில்லை. நோவாவுக்கு மட்டுமே தெரியும் இறுதித்தூதர் யாரென்று. மூழ்கிக் கொண்டிருக்கும் பூமிக்கப்பலில் இருந்து கொண்டு யார் பூபாளம் இசைத்துக் கொண்டிருப்பது.
விடிஞ்சா தீபாவளி. வீடே எனக்கு அந்நியமாத்தான் தெரியுது. ஆத்தா தான் சோறூட்டணும், ஆத்தா கூடத்தான் படுத்துக்கணும Read More...
இந்த நட்சத்திரங்களின் ஒளி என்னை வந்தடைய எத்தனை நாட்களாகிறது சலனங்களே வாழ்க்கைக் கடலிலிருந்து அலைகளை உருவாக் Read More...
அம்புப்படுக்கையில் பீஷ்மர் கெளரவர்கள் தோற்க காரணமாய் இருந்த வசுதேவ கிருஷ்ணனை பார்க்க பிடிக்காமல் கண்மூடிக Read More...
உருவத்தில் மனிதனாகவும் உள்ளத்தில் மிருகமாகவும் இருக்கின்ற மனிதர்கள் இங்கு எத்தனை கோடி? பயிருக்கும், பதரு Read More...
எந்த பிரார்த்தனை விண்ணப்பங்களையும் சமீபகாலமாக ஏறெடுத்துப் பார்க்கவில்லை இறைவன் திரிசங்கு நிலையில் இறைவன Read More...
என்ன கொடுத்தோமோ அதைத் தான் நாம் பெறுகிறோம் கைவிடப்பட்ட உலகத்துக்கு இப்போது கடவுள் தேவையாய் இருக்கிறா Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.