எம்மொழிக்கும் மூத்தவளே! எம்மொழியாய் வாய்த்தவளே! செம்மொழியாய் மொழிகளுக்குள் செம்மாந்திருப்பவளே என் அன்னைத் தமிழே உன்னை வணங்குகின்றேன். குழந்தையின் வார்த்தையை மொழிபெயர்க்கத் தெரிந்த தகுதியான ஒரே ஆள் அக்குழந்தையின் தாய் மட்டுமே. உணர்வறியும் நாவிலிருந்து வருவதாலோ என்னவோ சொற்களுக்கும் சுவை இருக்கிறது. கசப்பென்றும் இனிப்பென்றும். ஊசியின் காதுகளில் நூல்நுழைந்தால் தான் ஆடைகளின் கிழிசல்களைத் தைக்க முடியும்.. கவிதை வரிகள் படைத்த அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக