கிலியுகம்
கலிவரதனின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அப்போது சில ஆச்சரியமான அமானுஷ்யமான சம்பவங்களை எதிர்க்கொள்கிறார்.
அதே சமயத்தில்,
அரசாங்க அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவருக்கு நேரும் பிரச்சனைகள். அவர்களுக்கு சம்பந்தபட்ட அனைவரும் அதன் காரணம் அறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். போலீஸ் துறை அனைத்து திசையிலும் விசாரணையை முடுக்குகிறது.
குற்றவாளியை நெருங்க முடிந்ததா…?
கதை இரண்டு கிளைகளாக தனித்தனியே பயணிக்கிறது. அவை ஒன்றிணையும்போது நாம் திடுக்கிடுவதை யாராலும் தடுக்கமுடியாது.
உயிர் உருகும் சத்தம்
இரண்டு பத்தரிகையாளர்கள் திண்டல் கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யமான விஷயங்களை பற்றி கேள்விப்பட்டு, ஆய்வு கட்டுரை ஒன்றை செய்ய அந்த கிராமத்திற்கு வருகிறார்கள்.அவர்கள் கேள்விப்பட்ட வீட்டின் அதிசய சக்தியை அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். இப்படியும் நடக்குமா என்று அதிர்கிறார்கள்.
சென்னையில் மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கும் பொருட்டு போலீஸ் விசாரணை நடைப்பெறுகிறது. ஆனால், பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள், நிகழ்வுகள் நடக்கின்றன. அதனால், விசாரணை குழப்பமான சூழ்நிலையை அடைகிறது.
அது ஏன் நடக்கிறது…? எதற்காக நடக்கிறது…? என்ற கேள்விகளுக்கு முதல் கிளை கதை பதிலளிக்கிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners