எளிமையான குட்டிக் கவிதைகள் தாங்கி வரும் இப்புத்தகம். நான் என்னை ஒரு பெருங்கவி என்று பறை சாற்றிக்கொள்ள வரவில்லை. மாறாக, என் கவிபாடும் உள்ளம் சிந்திய சில திவலைகளை உங்கள் முன் வைத்து, அதனை நீங்கள் சுவைத்து மகிழவேண்டும் என விரும்புகிறேன். அவற்றில் சில, சாதாரண நெல்மணிகளாம். பல, உமிக்கு ஒப்பானவையாகலாம். அரிய சில, அழகிய முத்துக்களாகவும் இருக்கலாம். படித்து இன்புறுங்கள்