Share this book with your friends

makkal mudhalvar / மக்கள் முதல்வர்

Author Name: Imalayen | Format: Paperback | Genre : Poetry | Other Details

" மக்கள் முதல்வர்" திராவிடச் சூரியன் திரு மு க ஸ்டாலின் அவர்களின் புகழ் சொல்லும் வாழ்த்து கவிதை தொகுப்பு. மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் டாக்டர் மு க ஸ்டாலின் அவர்களின் பெருமைகளையும் புகழையும் சிறப்பையும் மக்கள் அறியும் வகையில் கவிதைகள் வரைந்திருக்கும் என்னுடைய இந்த கவிதை முயற்சி ஏதோ விளம்பரத்திற்காக அல்ல முழுக்க முழுக்க இவருடைய மிகச்சிறந்த ஆட்சி ஆளுமை திறன் ஆகியவற்றால் முழுமையாக ஈர்க்கப்பட்டு அதன் உந்து சக்தியால் எழுதி முடிக்கப்பட்ட வைகள். அவருடைய மிகச்சிறந்த செயல்திறன், நுட்பமான மதிநுட்பம், மனவலிமை, செயல் வலிமை, இன மீட்பு மொழிக் காப்பு, மாநில உரிமைகளில் சமரசம் செய்யாமை, வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிப்பது போன்றவற்றின் சிறப்புகள் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு புகழ் கவிதை தொகுப்பு. வரலாறு இவரை எப்போதும் மறக்காது

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இமாலயன்

எழுத்தாளர் பற்றி. இமாலயன் என்பது எனது பெயர் நான் பிறந்து வளர்ந்து படித்து தற்போது வசிப்பது சென்னையில் தான். என்னுடைய தொடக்கப் பள்ளியையும் நடுநிலை படிப்பையும் ஸ்டெல்லா மேல்நிலைப்பள்ளியில் படித்தேன் பிறகு என்னுடைய மேல்நிலை  படிப்பை தோமையார் மலை பகுதியில் அமைந்துள்ள தூய தோமையார் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன், அங்குதான் விடை தேட முடியாமல் இருண்டு கிடந்த என் வாழ்க்கைக்கு பெரும் விதையான வெளிச்சங்களை கண்டு கொண்டேன், என் திறன்கள் அனைத்திற்கும் வாய்ப்புகள் வழங்கப் பெற்று வளர்த்துக்கொண்டேன். என்னை அந்த இடத்தில் அதிகம் ஊக்கப்படுத்திய என்னுடைய ஆசிரியர்கள் திரு ஜான் எபினேசர் அவர்களையும் திரு அல்பிரட் தேவனேசன் அவர்களையும், பெரும் மரியாதையுடன் நினைவு கூறுகின்றேன். படிப்பை முடித்து கல்லூரி படிப்பை இந்தியாவின் தலைசிறந்த கல்லூரியான சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேர்ந்தேன், அங்கும் என்னை பேராசிரியர்கள் பெரிதும் ஊக்கப்படுத்தினார்கள், அதில் பேராசிரியர் முனைவர் திரு அமல்ராஜ் ஐயா அவர்கள் என் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தூணாக திகழ்ந்தார். ஆசிரியர் பணியையும் என்னுடைய கல்வி நிறுவனமான  பிரைட் அகாடமி அதனையும், என்னுடைய கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் இசைத்துறையிலும் ஈடுபட்டேன். பிறகு ஒரு சில படங்களுக்கு இசையமைத்த அனுபவத்துடன் தற்போது பெரும் கனவுடன் திரைப்படம் ஒன்றை தயாரித்து இயக்கி கொண்டிருக்கிறேன்.  நான் பெற்ற அறிவை பிறருக்கு பகிர எப்போதும் ஆசைப்படுவது உண்டு அதன் முயற்சியாகத்தான் இந்த புத்தகங்கள் வெளியிடும் முயற்சி உள்ளது.

Read More...

Achievements

+3 more
View All