பல்லவ மாமன்னன் இராஜசிம்மன், காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தன்னை இரட்டைச் சிற்பத்தில் செதுக்கிச் சென்றிருக்கிறான் என்பதை பதின்மூன்று நூறாண்டுகளுக்குப் பின்னர் முதன்முதலாகக் கண்டு சொல்வதே இப்புத்தகம். வரலாற்றில் ஒரு சிற்பத்தில் இரு வடிவங்களைச் செய்த சிற்பங்கள் மிக அரிதாகவேக் கிடைக்கின்றன. அவ்வரிசையில், யாரும் எளிதில் தன்னைக் காணாதவாறு ஒரு சொல் இரு பொருள் போல ஒரு சிற்பத்தில் இன்னொரு சிற்பமாய் உறைந்திருந்து வந்தாரை நோக்கும் மன்னனாக காஞ்சி கைலாசர் கோயில் வாசலில் வீற்ற