Share this book with your friends

Thee Pattrum Vaanam / தீப்பற்றும் வானம்

Author Name: Dr. Imalayen | Format: Paperback | Genre : Philosophy | Other Details

தீப்பற்றும் வானம் இது எழுச்சி ஊட்டும் கட்டுரைகளை தாங்கி வரும் ஒரு சிந்தனை கட்டுரை தொகுப்பு ஆகும். மாலை தொடங்கியவுடன் இருளை பூசிக்கொள்ளும் அந்த நாளின் இறுதி காலையில் சூரியன் உதிக்கும் வேளையில் பட்டவர்த்தனமான பகலை காட்டுவதற்கு முன்பு ஒரு எரிகின்ற மிகப் பெரிய நெருப்பு பந்து எழுந்து வருவது போலவும் அந்தப் பந்தின் கதிர்கள் வானத்தின் எல்லைகள் எல்லாம் எட்டிப் பிடித்து தீ பிடித்து எறிவது போலவும் தோன்றும் அதுபோல மனிதனின் சிந்தனைகளில் தேங்கி கிடக்கும் இருட்டு எண்ணங்களை விரட்டி அடித்து கதிரவனின் ஒளியைப் போல கருத்துக்களின் ஒளி சிந்தனையில் மேல் எழும்பி வர இந்த எளிய முயற்சி உங்களுக்கு படைத்தளிக்கப்படுகின்றது. இந்தக் கட்டுரை தொகுப்பை உருவாக்குவதற்காக என்னுடன் இணைந்து பயணித்தவர்கள் உருவாக்க உறுதுணை புரிந்தவர்கள் அவர்கள் அத்தனை பேருக்கும் இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு இந்த புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய பெருமக்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றிகளை பாதகாணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். சிந்தனையே செயல் ஆகின்றது செயலின் வழியாகவே ஒரு மனிதன் சமூகத்தில் அடையாள படுகின்றான் என்னும் அந்த தொடரில் அந்த சங்கீதம் மனிதன் சிந்தனை என்பது விதையாகவும் மூலக்கருவாகவும் இருக்கின்றது அவ்வாறு நாம் சிந்தனையை சீர்படுத்தி சரி செய்து விட்டால் அந்த நிலத்தில் வளர்கின்ற செடிகள் எல்லாம் சத்துள்ளதாகவும் பிறருக்கு மிகுந்த பயனை அளிக்கத்தக்கதாகவும் வளர்ந்து செழித்து வரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாது ஆதலால் இந்த கட்டுரை தொகுப்பானது உங்கள் சிந்தனைகளை தட்டி எழுப்பும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் நன்றி.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டாக்டர் இமாலயன்

வணக்கம் அன்பு உறவுகளே நான் எழுத்தாளர் டாக்டர் இமாலயன் சென்னை தமிழ்நாட்டில் இருந்து. அடிப்படையில் நான் ஒரு பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் ஆங்கிலம் பொருளியல் வணிகவியல் வரலாறு சமூகவியல் உளவியல் புவியியல் போன்ற பாடங்களை எடுக்கும் திறன் பெற்றவன். இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் வணிகவியல் சார்ந்த அனைத்து பாடங்கள் பொருளியல் மற்றும் மேலாண்மை சார்ந்த அனைத்து பாடங்களையும் என் கடந்த காலங்களில் எடுத்தும் நிகழ்காலத்தில் என் ஆசிரியர் பணியை மேற்கொண்டும் வருகிறேன். நான் என்னுடைய மேல்நிலைப் படிப்பை தூய துவமா மேல்நிலைப் பள்ளியில் முடித்து, என்னுடைய இளங்கலை பொருளியல் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் நிறைவு செய்தேன். முதுகலை பொருளியல் படிப்பை சிக்கிம் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியின் வாயிலாக படித்து முடித்தேன். தமிழ் இலக்கியவியல் படிப்பில் இளங்கலை புலவியல் படிப்பை முதல் தேர்ச்சியில் வெற்றிகரமாக முடித்தேன், இதனை கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தேன். பொருளியல் படிப்பில் தத்துவ பேரறிஞர்கான எம்ஃபில் பட்டத்தையும் பெற்றது உள்ளேன். முனைவர் பட்டத்திற்கான பிஹெச்டி ஆய்வை பொருளியல் பாடத்தில் நமது இந்திய தேசத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் எந்த ஊரில் அமைந்துள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறேன். எழுத வேண்டும் என்கிற ஆற்றல் நான் எப்பொழுது எழுதத் தொடங்கினேனோ அப்பொழுது இருந்து என்னைப் பற்றிக் கொண்டு இப்போது வரை என்னுடன் பயணித்து வருகின்றது. என்னை பாதித்த நிகழ்வுகளையும் நான் கற்றுக் கொண்ட அறிவையும் பிறருக்குத் தருவதில் பெரும் இயம்புதலை கொண்டவனாக நான் இருக்கிறேன். தமிழ் இலக்கணத்தை முறையே படித்தவன் என்கிற முறையில் தமிழ் மீது மாறாத பற்றும் தீராத காதலும் எப்போதும் கொண்டுள்ளேன். என்னுடைய எழுத்துக்களும் நான் உங்களுக்கு படைத்தளிக்கும் புத்தகங்களும் உங்கள் சிந்தனை வேர்களில் நீர் பாய்ச்சி உங்கள் அறிவில் வெளிச்சத்தை ஏற்றும் என்று நம்புகிறேன். என் படைப்பை பார்வையிட்டு படித்து பயன் பெற வந்திருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றி வணக்கம்.

Read More...

Achievements

+3 more
View All