இந்துமதம் அடிப்படைவாதம் தலைதூக்கி வரும் காலமிது. இந்துமத மீட்பு அல்லது கோவில் மீட்பு என்பதன் பொருள் வழக்கொழிந்து போன நால்வகைப் பகுப்புமுறையை மீட்டுக் கொணர்ந்து பார்ப்பனஆதிக்கத்தைநிலை நாட்டுவதேயாகும்.அதன் தொடக்கமாகத்தான் அரசு இந்துக் கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கமும் எழுகிறது. அரசு வெளியேறினால் என்னவாகும் என்று நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டியதில்லை. தில்லைக் கோவிலில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளைக் கவனித்து வந்தால் போதும