முனைவர் ப. விக்னேஸ்வரி இயற்கை மீது பேரன்பு கொண்டவர். கவிதை எழுதுவதையும், வாசிப்பதையும் வரமாக கருதுபவர் .கண்ணில் தோன்றிய காட்சிகளை நெஞ்சில் பதித்து கவிபடைத்துள்ளார். நீர்நிலைகளில் மலரின் நீளம் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவு தான் நீரின் அளவும் இருக்கும். அதுபோல மனிதர்களின் உள்ளத்தில் நம்பிக்கையின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் உயரமும் இருக்கும் என்று திருவள்ளுவர் கூறியிருப்பது போல நமது முயற்சியும், நம்பிக்கையும் தான். நம் வாழ்க்கையை அற்புதமாக மாற்றும், அனைவரின் என்ன பிரதிபலிப்பினை கவிதைகளில் கண் முன் கொண்டுவந்துள்ளார்