Share this book with your friends

Nabakahab Pettakankal / ஞாபகப்பெட்டகங்கள் Collection of Memories

Author Name: Ervai. T. A. Barakkathu Nisha | Format: Paperback | Genre : Poetry | Other Details

என் ஞாபகப்பெட்டகத்தில் அடைகாத்து வைத்திருந்த சந்தோசங்கள், அவமானங்கள், சோகங்கள், வலிகள், வேதனைகள், காயங்கள், ஏமாற்றங்கள், பிரிவுகள், துரோகங்கள், துர்மரணங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், ஆசைகள், கனவுகள், நடந்தவைகள், மகிழ்ந்தவைகள், நெகிழ்ந்தவைகள் என்று ஏராளமான நினைவுகளின் தொகுப்புகள் என பட்டியல் நீண்டுகொண்டேப் போகும் அந்த நினைவுகளின் சில மணித்துளிகளை உங்களின் விழியின் வழியே ஊடுருவி உங்களின் இதயங்களுக்கு எடுத்துச் செல்ல விரும்பிய வண்ணம் இந்த உணர்ச்சி மாலையை உங்கள் கரங்களுக்கு முன்னே சமர்ப்பிக்கின்றேன்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Paperback RM 242.00

Inclusive of all taxes

Also Available On

ஏர்வை. தி. அ. பரக்கத்து நிஷா

தி.அ.பரக்கத்து நிஷா, ஜனாப் தி.அயூப்கான் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஜனாபா அ.ரஹீமாபீவி தம்பதியருக்கு, ஏழாவது மகவாக இராமநாதபுர மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழும்  சிறப்பு மிக்க ஏர்வாடி தர்ஹாவில் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், இளங்கலை மற்றும் முதுகலை ஆங்கில இலக்கியம் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரையிலும், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைக் குயின்ஸ் மேரிஸ் கல்லூரி, சென்னையிலும் பயின்றார்.ஜனாப் அ. கபீர் ரஹ்மான் என்பவரை மணம் முடித்து, ஹபீபா, ஆரிஷ் என்ற இரண்டு மகவுகளை ஈன்றெடுத்தார். 2012 முதல் வரலாற்று புகழ் மிக்க சேதுபதி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக செவ்வனே பணியாற்றி வருகிறார்..

Read More...

Achievements