என் ஞாபகப்பெட்டகத்தில் அடைகாத்து வைத்திருந்த சந்தோசங்கள், அவமானங்கள், சோகங்கள், வலிகள், வேதனைகள், காயங்கள், ஏமாற்றங்கள், பிரிவுகள், துரோகங்கள், துர்மரணங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், ஆசைகள், கனவுகள், நடந்தவைகள், மகிழ்ந்தவைகள், நெகிழ்ந்தவைகள் என்று ஏராளமான நினைவுகளின் தொகுப்புகள் என பட்டியல் நீண்டுகொண்டேப் போகும் அந்த நினைவுகளின் சில மணித்துளிகளை உங்களின் விழியின் வழியே ஊடுருவி உங்களின் இதயங்களுக்கு எடுத்துச் செல்ல விரும்பிய வண்ணம் இந்த உணர்ச்சி மாலையை உங்கள் கரங்களுக்கு முன்னே சமர்ப்பிக்கின்றேன்.