பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதரவாக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்தி விடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூக கட்டமைப்பிற்கு பயந்து அநாதரவான பெண்களை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ள பாரம்பர்ய குடும்பத்தினர் தயங்குகின்றனர். அதை உடைத்தெறிந்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுந்தவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டினுள் நுழைகிறாள் நாயகி.