Share this book with your friends

A Book Speaks / பேசும் புத்தகம் சீர்திருத்தத்திற்கான ஓர் திறந்த புத்தகம்

Author Name: J. W. Ebenezer Kirubakaran, V. Mercy Florence | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

பேசும் புத்தகம் எனும் இந்நூல் கிறிஸ்தவ குமுகாயத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கருத்தாழமிக்க இறையியலை அள்ளித்தரும் அருளுரைகள் இடம் பெறுகின்றன. தலைப்பு மற்றும் கருப்பொருள் சார்ந்த அருளுரைகளும், சிறப்பு நாட்களுக்குரிய அருளுரைகளும், லெந்துகால வெள்ளிக்கிழமை மாலை தியானங்களும், கிறிஸ்து இயேசு மொழிந்த ஏழு சிலுவை மொழிகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன. இந்த புத்தகம் சமூகநீதியைப் புரிந்துகொள்ளவும்  கிறிஸ்துவின் சீடர்களாய் சான்று பகிரவும் நம் உள்ளுணர்வை கொழுந்துவிட்டு எரியச்செய்யும் அருளுரைகளை உள்ளடக்கியிருக்கும் ஒருநூல். எக்காலத்தும் பேசிக் கொண்டேயிக்கும் ஒரு புத்தகம் ஆகும். இயேசு கிறிஸ்துவை தெய்வீக நிலையில் மட்டும் புரிந்து கொள்ளாமல் சமூக செயற்பாட்டாளராக புரிந்து கொள்ளவும், இறையரசு வளர்ந்து  அமைதியும் அன்பும் நிலை நாட்டப்படுவதற்கு, நம்மை கருவிளாக அர்ப்பணிக்கத் தூண்டும் அருட்செய்திகளை இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது. திருச்சபை ஆயர்களுக்கும், அருளுரைஞர்களுக்கும் உதவும் சிறப்பான கையேடு எனலாம்.          

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆசிரியர்: J. W. எபிநேசர் கிருபாகரன் தொகுப்பாசிரியர் : திருமதி. V. மெர்சி ப்ளாரன்ஸ்

இந்நூலின் ஆசிரியர் அருள்பணி.J.W. எபிநேசர் கிருபாகரன் ஆயர் அவர்கள் திரு.ஜான்வெஸ்லி & திருமதி.லில்லி பத்மா ஆகிய பெற்றோருக்கு முதன் மகனாக திருக்கோவிலூரில் பிறந்து பெரியபாளையத்தில் வளர்ந்தவர். இளங்கலை இயற்பியல் படிப்பை வேலூரில் உள்ள ஊரிசு கல்லூரியிலும், தென்னிந்திய திருச்சபை, சென்னை பேராயத்தால் செப்டம்பர் 1990 இல் ஆயர் திருப்பணிக்கு ஈக்காடு குருசேகரத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டு தனது இறையியல் கல்வியை மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியிலும் பயின்றவர். கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆயராக தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தில் பணியாற்றியவர். அக்குபஞ்சர் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் படித்தறிந்தவர். முதுகலை சமூகசேவை பயின்றவர். மெய்யியலில் முனைவர் பட்டம்பெற்றவர். பன்முகத்திறன் கொண்ட சமூக செயற்பாட்டாளர்.  அருளுரை ஆற்றுவதில் நிகரற்றவர். இந்நூலில் இடம்பெறும் அருளுரைகளை தொகுத்து வெளியிடும் அவரது இணையர் திருமதி.மெர்சி ப்ளாரன்ஸ் சென்னை பிஷப் காரி மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை பொருளியல் ஆசிரியராக பணியாற்றுகிறார். தன் இணையரை போன்றே சமூக அக்கறையும், அருளுரை ஆற்றும் திறன் கொண்டவர்.       
 

Read More...

Achievements

+5 more
View All