Share this book with your friends

Aatchikalai / ஆட்சிக்கலை

Author Name: Udaya Kathiravan | Format: Hardcover | Genre : Literature & Fiction | Other Details

நிக்கோலோ மச்சிவெல்லி (3 மே 1469 - 21 ஜூன் 1527) மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த இத்தாலியத் தூதர், எழுத்தாளர், தத்துவவாதி, வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல் ஆர்வலர். 1513-ஆம் ஆமாண்டில் எழுதப்பட்ட அவரது அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு ‘தி பிரின்ஸ்’ மிகவும் பிரபலமானது, ஆனால் 1532 வரை வெளியிடப்படவில்லை. அவர் ‘நவீன அரசியல் தத்துவம் மற்றும் அரசியல் அறிவியலின்’ தந்தை என்று அழைக்கப்படுகிறார். 

 

‘தி பிரின்ஸ்’ புத்தகத்தில் அரசியல் தொடர்பான பல கருத்துகள் உள்ளன.  இது ஒரு புதிய அரசனை உருவாக்கும் கவனத்தைச் செலுத்துகிறது (தற்கால சூழலில் புதிய நிறுவனங்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்). அதிகாரத்தைத் தக்கவைக்க, பல்வேறு நிறுவனங்களின் நலன்களைக் கவனமாகக் சமநிலைப்படுத்த வேண்டும். இதற்கு நேர்மாறாக, ஒரு புதிய அரசனுக்கு ஆட்சி புரிவதில் மிகவும் கடினமான பணி உள்ளது. நீடித்த அரசியல் கட்டமைப்பைக் கட்டியெழுப்ப அவர் முதலில் தனது புதிய அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தார்மீக ஊழலை எதிர்கொண்டு சமூக நன்மையையும் அதன் பாதுகாப்பையும் அடைய முடியும் என்று மச்சியாவெல்லி உணர்த்தியுள்ளார். மச்சியாவெல்லி, பொது சமூக அறநெறிகளையும் மற்றும் தனிமனித அறநெறிகளையும் வெவ்வேறாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் விளைவாக, ஒர் ஆட்சியாளர் நற்பெயரை நிலைநாட்ட அதிகம் உழைக்க வேண்டும், ஆனால் சரியான நேரத்தில் தந்திரமான முறையில் செயல்படவும் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளார்.

 

மச்சியாவெல்லியின் ‘தி பிரின்ஸ்’ கோட்பாடுகள் இன்றும் பொருந்தும். நிர்வாகத்தின் முக்கிய உத்திகள் மற்றும் மேலாண்மை தலைப்புகளில் உணர்த்துகின்றன.

* ஆட்சியின் நிரந்தரத்தன்மை

* ஒன்றிணைத்தல்

* கூட்டாண்மை

* பாரம்பரிய அடிப்படையிலான நிர்வாகம்

* திறன் அடிப்படையிலான நிர்வாகம்

* ஒப்பந்த நிர்வாகம்

* நிலைத்தன்மை

* திறன் மேலாண்மை

* போட்டி மேலாண்மை

* ஆலோசனைகள்

Read More...
Hardcover
Hardcover 1365

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

உதய கதிரவன்

உதய.கதிரவன் (கதிரவன் உதயகுமார்) ஒரு பன்முகத் திறன் கொண்ட இருமொழிக் கவிஞர், பாடலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்; கவிதை, இசை, சமகாலத்திற்குப் பொருந்தக்கூடிய பழங்காலப் படைப்புகளின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றின் மூலம் பல்வேறு வகையான பங்களிப்புகளில் இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகளில் புதிய பரிமாணத்தை உதய.கதிரவன் வழங்கி வருகிறார். அவர்தம் வெளியீடுகள்,
 
1. கதிரின் கவிதைகள் (2018)

2. போர்க்கலை - ‘The Art of War’ இன் மொழிபெயர்ப்பு (2019)

3. ஆண்பாவம் (2020)

4. சுருக்குப்பை (2020)

5. Jingle and Tingle (2020)

6. Pensive (2020)

7. கபீர் கவிதைகள் (2021)

8. ரூமி கவிதைகள் (2021)

9. ஜிப்ரான் கவிதைகள் (2021)

10. Thought Shower (2021)

11. ஆட்சிக்கலை (2022)

Read More...

Achievements

+7 more
View All