Share this book with your friends

AGAZHI / அகழி கவிதைகள் சூழ் அரண்

Author Name: Ra. Sa. Emalathithan | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்நுலெங்கும் காதல் சார்ந்தவைகள் தான் பெரும்பான்மையாக நிரம்பி வழிகின்றன. கூடவே, இடையிடையே, நம்மை சுற்றிய பல நிகழ்வுகளும், சந்தித்த அனுபவங்களும், கவிதைகளாக இங்கு இடம் பிடித்திருக்கின்றன. கவிதைகள் என்பது பெரும்பாலும் கற்பனைகள் நிறைந்ததாகவும் இருந்தாலும் கூட, எங்கோ நடந்த சமூகத்தின் பிரதிபலிப்புகளையும் இந்த நூலின் ஊடாக பதிவாக்கப்பட்டிருக்கிறது.

Read More...
Paperback
Paperback 225

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இரா.ச.இமலாதித்தன்

2008ம் காலக்கட்டங்களில் இணைய குழுமங்களில் எழுத தொடங்கிய இந்த எளியவனின் ஒரு சிறு பயணம், இன்றைக்கு ஒரு நூலாக பிரசுரிக்கும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. எனக்கு எழுத வருமென்பதை என்னை விட, என்னை கவனித்தவர்களே நன்றாக அறிந்திருந்தனர். நேரடியான தொடர்புகளே இல்லாத அவர்களை போன்றவர்களாலேயே, தொடர்ச்சியாக எழுதும் பழக்கமும் எனக்குள் ஏற்பட்டது. என் வாழ்வில் இத்தனை ஆண்டுகளில் நான் சந்தித்த நபர்களும், நேரில் கண்ட என்னை சுற்றிய பல நிகழ்வுகளும், நான் சந்தித்த அனுபவங்களுமே, கவிதைகளாக இங்கு இடம் பிடித்திருக்கின்றன. கவிதைகள் என்பது பெரும்பாலும் காதல் சார்ந்ததாகவும், கற்பனைகள் நிறைந்ததாகவும் இருந்தாலும் கூட, எங்கோ நடந்த சமூகத்தின் பிரதிபலிப்புகளையும் என் எழுத்துகளின் ஊடாக பதிவாக்கிருக்கிறேன். இந்நூலிலுள்ள தொன்னூறு சதவீதமானவைகள், ஏறத்தாழ 2009ம் ஆண்டிலிருந்து 2015 வரையிலான காலக்கட்டங்களில் ‘தமிழ்வாசல்’ (www.tamilvaasal.blogspot.com) என்ற வலைப்பக்கத்தில் எழுதியவைகளே. பெரியளவிலான வாசிப்பு அனுபவங்களோ, இலக்கிய ஆர்வங்களோ ஏதுமின்றி, இணையத்தில் அதிக நேரங்களை செலவிடும் முழுநேர இணையவாசியான எனக்குள், தோன்றியவற்றையெல்லாம் கவிதைகளாக்கி வைத்திருந்தேன். இப்பொழுது அவற்றையெல்லாம் ஒழுங்கு படுத்தி, தொகுத்து புது வடிவம் கொடுத்திருக்கின்றேன். இந்நூலெங்கும் ஒரு பாமரனின் கற்பனை எழுத்து வடிவங்களையே காணலாம். எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி வாசித்து பாருங்கள். நிச்சயமாக, இந்நூல் உங்களை கவருமென நம்புகிறேன்.

அன்புடன்,

இரா.ச. இமலாதித்தன்

Read More...

Achievements