Share this book with your friends

Arunachalamum Arumai Nayanmarkalum / அருணாசலமும் அருமை நாயன்மார்களும்

Author Name: Kavinjar Aranganathan | Format: Hardcover | Genre : Others | Other Details

நான் வெண்பா மாலையில் குறிப்பிட்டதைப் போல ஆக்கியழித்தாரையுமே பேணி மறைத்தருளும் ஐந்தொழிலானை அம்பிகையை வணங்கும்போதும் அவனுறையும் மாமலையை கண்ணுற்று தொழுதேத்தும் போதும் ஏதுமற்ற ஏழையேனுக்கு பாப்புனையும் நுண்மாண் நுழைபுலம் தந்தருளிய ஆறெண்ணி சீரெண்ணி அவன் மீதும், மாமலை, திருவிழா உற்சவங்கள், ஆலயம்,  மூர்த்திகள் அதன் கீர்த்திகள் இத்யாதிகளை நன்தமிழில் அதுவும் வெண்தமிழில் வெண்பாக்களாக புனைய வேண்டும் என்று அவனருளிய அவா உந்த அருணையீசன் பற்றி தல, மூர்த்தி வரலாறு உள்ளிட்ட நூல்களை வாங்கிப் படித்து உள்வாங்கி ஏதோ அவனருளிய என் சிற்றறிவுக்கு எட்டியவாறு அந்த வெள்ளையான் ஏறும் விமலனைப் பாடியுள்ளேன். மூர்த்திகள், பிரகாரங்கள், கோபுரங்கள் அட்டலிங்க அனுட்டானங்களை என் சிற்றறிவுக்கு விளங்கிய வரை விளக்கியுள்ளேன். நிறையிருப்பின் வாழ்த்துக குறையிருப்பின் மன்னிக்க.

என்றும் நன்றியுடன்

அன்பன்

கவிஞர் இர, அரங்கநாதன்

Read More...
Hardcover

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர் அரங்கநாதன்

திருவண்ணாமலை -செங்கம் வட்டம் கண்ணக்குருக்கை  கிராமத்தைச் சேர்ந்த கவிஞர்.இரா,அரங்கநாதன்  விவசாயி- பத்தாவது வகுப்பு வரை படித்தவர். தன் சொந்த ஆர்வத்தால்-சுய முயற்சியால் இலக்கணம் கற்று அனைத்து  வகை மரபுக் கவிதைகள் எழுதும் ஆற்றலைக் கொண்டவர்.இவரின் துணைவியார் திருமதி.அர.சாமுண்டீஸ்வரி. இவரின் வாரிசுகள் அர. பிரியதர்ஷனி- மருத்துவர் அர.பிரேமலதா- மென்பொறியாளர் அர.பாரதி-செயற்கை நுண்ணறிவு மென்பொறியாளர் ஏராளமான பாடல்களை எழுதி உள்ள இவர் இப்போதுதான் படைப்புகளைப் புத்தகமாக வெளியிடுகிறார்.

     இவரின் அருணாச்சலாமும் அருமை நாயன்மார்களும் மற்றும் வியந்தான் வியர்த்தான் கம்பன்-இரண்டுமே இன்சுவை படைப்புகள் இவைகளில் உள்ள பாடல்களும்,  கவிதைகளும் சாகாவரம் பெற்று நிலைக்க்க்கூடியவை. சங்க காலக் கவிதைகளுக்கு  ஒப்பானவை -சிறப்பானவை ஆழ்ந்த புலமையும் கவித்திறனும் கொண்ட இவரின்  கவியாற்றல்  வியக்கவைக்கிறது. ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்கவேண்டிய நூல்.

Read More...

Achievements