Share this book with your friends

Aval Oru Maram / அவள் ஒரு மரம்

Author Name: Reshma Selvaraj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மரமொருத்தி மேலிருக்கும் கதிரவனைக் காதலிக்கிறாள். அவள் வாழும் காட்டில் மனிதர்கள் ஒரு இரயில் பாதை அமைக்க உள்ளனர். தான் விரைவில் இறக்கவிருப்பதை அறிந்த அவள், அங்கு நடப்பவை அனைத்தையும் ஒருநாள் தனது காதலனிடம் சொல்ல முடிவெடுக்கிறாள். அந்நாளில் இவ்விருவரும், இரவில் வரும் நிலவும் என்னவெல்லாம் பேசுகின்றனர் என்பதுதான் கதை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகள் அழிவது நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு சீரிய நோக்கத்தோடு எழுதப்பட்ட புத்தகம் இது. மனிதருக்காகச் சட்டங்கள் இருப்பதைப் போல் இம்மலைக்காகவும் சட்டங்கள் வேண்டும் என்று கோருகிறது. 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரேஷ்மா செல்வராஜ்

ரேஷ்மா செல்வராஜ் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவுடன் தன் கனவிற்காக உழைக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தான் பெற்ற அனுபவத்தையும், பிற மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் அனுபவித்ததையும் ஆய்ந்து, தனது முதல் புத்தகமான 'I have an interview tomorrow' என்ற ஆங்கிலச் சிறுகதையை எழுதினார். இது வேலை வாய்ப்பின்றி தவிக்கும் ஒரு மாற்றுத்திறனாளி பட்டதாரியின் ஒருநாளைப் பற்றியது. இப்போது அவர் தனது இரண்டாவது புத்தகமான 'அவள் ஒரு மரம்' என்ற தமிழ்ச் சிறுகதையினை எழுதி வெளிவிட்டுள்ளார். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நடைபெறும் காடழிப்பை விவரிக்கிறது. 

Read More...

Achievements