Share this book with your friends

Kaarthiyin Aaraaichi / கார்த்தியின் ஆராய்ச்சி

Author Name: Meena Subramanian | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஜ்ஹஜ்மௌ என்ற ஊரில் ஒரு என்விரொன்மென்டல் எகொனொமிக்ஸ் மாணவன் , தனது ஆராய்ச்சியில், நிறைய சவால்களை சந்திக்கிறான். அவன் மடிகணினி துலைந்ததும், அவன் ஆராய்ச்சி தடைப்பட்டுப் போகிறது. கம்ப்ளெயிண்ட் கொடுத்து, பல நாட்கள், பின் சென்று விசாரித்ததில், வேறு புதிய இன்ஸ்பெக்டரை சந்திக்கிறான். மடிகணினி கிடைக்குமா, கிடைக்காதா என்ற நிலமையில், வேறு சில மர்மங்களையும், ஆபத்துகளையும் எதிர்க்கொள்ள நேர்கிறது. அவன் இவற்றில் எல்லாம் இருந்து வெளிவருவானா? அவன் ஆராய்ச்சியின் முடிவுதான் என்ன? வாசகர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவம்.

ஒரு எழுத்தாளரின் விமர்சனம்:

தனது அறிமுக நாவல் – கார்த்தியின் ஆராய்ச்சி – மூலமாக எழுத்தாளர் மீனா சுப்ரமணியன் வாசகர்களுக்கு இரட்டை அனுபவங்கள் எவ்வித தடையும் இன்றி பெருவதற்க்கு மிக சிறந்த வகையில் கதைக்களத்தை உருவாக்கி இருக்கிறார். நடுத்தர வருமான வர்கத்தில் உள்ள குடும்பத்தில் வளர்ந்து வரும் மாணவன் கார்த்திகேயன் தன் PhD வெற்றிகரமாக முடிக்க எடுக்கும் முயற்சிகள், அதன் பொருட்டு மொழி தெரியாத நகரில் அவன் எவ்வாறு தனது ஆராய்ச்சியினால் சுற்றுப்புர சூழல் மற்றும் சுகாதார குற்றங்கள் புரிகின்ற ஒரு மாஃபியா கூட்டத்தைப் பிடித்து தண்டிக்க, போலிசாருக்கு உதவும் வகை. மீனா அவர்கள் வெகு திறமையாக ஒரு விருவிருப்பான நாவலை நமக்காக படைத்துள்ளார். அற்புதம்!

- டி .ஆர்.கிரிதர், மேலாண்மை ஆலோசகர், எழுத்தாளர்

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மீனா சுப்ரமணியன்

ஆசிரியர் திருமதி மீனா சுப்ரமணியன், வணிகவியல் பாடத்தில் ஒரு முதுகலை பட்டதாரி. அவர் பயின்றது சென்னை பல்கலைக்கழகத்தில். அவர் ஒரு பொதுத்துறை வங்கியில் முப்பது வருடம் பணியாற்றி இருக்கிறார். வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பின் அவர் தனக்கு பிடித்த களத்தில் இறங்கியுள்ளார். “கார்த்தியின் ஆராய்ச்சி” அவர் வெளியிடும் முதல் புத்தகம்.

Read More...

Achievements