Share this book with your friends

Kadhal perum pangu vagikkum / காதல் பெரும் பங்கு வகிக்கும்

Author Name: Ajay Balasubramaniyan | Format: Paperback | Genre : Poetry | Other Details

பட்டாம்பூச்சி கவிஞரின் "காதல் பெரும் பங்கு வகிக்கும்" என்னும் இந்நூலில் மனதை வருடிச்செல்லும் வசீகரமான காதல் வரிகள் பெரும் பங்கு வகித்தாலும் ஆங்காங்கே காணப்படும் வாழ்க்கையை நெறிப்படுத்தி உற்சாகமூட்டும் கவி வரிகளும் வாசகர்களான உங்களை சிந்தனையில் ஆழ்த்த காத்திருக்கின்றன. வாசிக்கும் போது நம்மோடு தொடர்புள்ளதாக நமக்கு பொருத்தமானதாக அமைந்திருக்கும் கவிதை வரிகளையே நாம் அதிகம் நேசிப்போம். அந்த வகையில் இப்படியான வரிகளை வரிசையாக தந்திருக்கும் கவிஞர் பா. அஜய் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் அவரின் எதிர்கால நூல் வெளியீடுகள் சிறப்புற அமைய மனமார்ந்த வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

- இலங்கை பிரியா 

Read More...
Paperback
Paperback 240

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அஜய் பாலசுப்ரமணியன்

தமிழுக்கு உன் உதடுகள் தரை இறங்குவது, எனக்கும் என் புத்தகத்திற்கு நீ முத்தம் கொடுப்பதற்கு சமம்!

 கடக்கின்ற ஒவ்வொரு தருணங்களிலும் நம்பிக்கையும் காதலும் நிறைந்திருந்தால் அந்த தருணம் இன்னும் அழகாகவே இருக்கும்.

அப்படியானால் இந்த புத்தகமும் உங்களுக்கு அழகான தருணத்தை தரும் என்று நம்புகிறேன்.

காதல் கவிதைகள் அதிகம் இருப்பதால் "காதல் பெரும் பங்கு வகிக்கும்"என்று பெயராக வைத்திருக்கிறேன்.

தொழிலை செய்ய தொழிற்கல்வி படிக்கிறோம், நல்ல வாழ்க்கையை வாழ காதலை படிக்க மறக்கிறோம்.

 இது காதலைப் படிக்கவே எழுதப்பட்ட கவிதைகள்.

பகலும் சூரியனும் ஒன்றாக வருவது போல இரவும் நிலவும் ஒன்றாக வருவது போல

ஒன்றாக வாழ்ந்தால் தான் உறவுக்கு அழகு!

 நான் எழுதியிருக்கும் நான்காவது புத்தகம் இது. யாருக்காகவும் நான் எழுதப்படவில்லை, யாரோ என்னை எழுத வைக்கப்பட்ட கவிதைகள் தான் இது. அது கடவுள் என்று உணர்கிறேன் 

 நான் நன்றி சொல்ல நினைக்கும் ஒருவர் கடல் தாண்டி

கரை தாண்டி

மலை மீது

எழில் கொஞ்சும் அழகோடு

குயில் பாடும் இசையோடு

இலங்கையில் வாழும் பிரியா அவர்களுக்குத்தான்!

 எந்த உறவும் இல்லாமல் தூரமாக இன்றும் என்னை நேசிக்கும் பிரியமான என் வாசகர்களுக்கு நன்றியைக் கூறுகிறேன்.

 வாசகர்களே எனக்கும் என் தமிழுக்கும் பக்கபலமாக நிற்கும் பலம் என்று கருதுகிறேன்.

நன்றி 

Read More...

Achievements