Share this book with your friends

KALYANAMAM KALYANAM / கல்யாணமாம் கல்யாணம்

Author Name: Tinnevelly Christian Historical Society | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

புதிதாக வாழ்க்கை பயணத்தை தொடங்கும் புதுமண தம்பதிகளுக்கு பாரபரனின் நாமத்தில் வாழ்த்துக்களையும், கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் அன்பின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“கல்யாணமாம் கல்யாணம்” இந்நூலில் திருநெல்வேலி ஜில்லாவில் மிஷனெரி வருகைக்கு பின்புதான் பெண் கல்வி அதிகரித்தது. சமூகம் மேம்பாடு அடைய பெண் கல்வி மிகவும்    அவசியம் என்பதையும், பெண்களுக்கு தங்கள் உரிமைகளை பெறுவதற்கு கல்வி மட்டுமே ஆயுதம் என்பதையும் கடந்த  காலங்களில் நடந்த வரலாற்று உண்மை சம்பங்களை தொகுத்து எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கிறிஸ்துவின் அன்பை ருசித்தார்கள், போராட்டங்களில் எப்படி பொறுமையுடன் குடும்பத்திலும், கிறிஸ்தவ மக்களிடமும், பிற மத மக்களிடமும் எப்படி  கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தினார்கள்  என்பதையும் இந்நூல் காட்டுகின்றது. திருநெல்வேலியில் நடைபெற்ற முதல் திருமணம், இங்கிலீஷ் கல்யாணம், பெண்கல்வி, இல்லத்தரசிகள் கணவனிடமும், பிள்ளைகளிடமும், குடும்பத்திலும், திருச்சபையிலும் எப்படிப்பட்ட விசுவாசத்தை காத்துக் கொண்டார்கள் என்பதையும், மேலும்  இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவும், இன்றைய இளம் தலைமுறைகளுக்கு ஒரு சவாலையும் வைக்கின்றது. இந்த நூலின் செய்திகள் அனைத்தும் வரலாற்றுப் பேராசிரியர் தே. அ. கிறிஸ்துதாஸ் அவர்களின் படைப்புகளில் இருந்து தொகுக்கப்பட்டது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டின்னேவேலி கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்

கிறிஸ்டியன் ஹிஸ்டாரிகல் சொசைட்டி, கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்களின் கூட்டுறவு, இது கிறிஸ்தவ வரலாற்றை மேம்படுத்துகிறது, ஈடுபடுத்துகிறது, செழுமைப்படுத்துகிறது மற்றும் இந்திய சமுதாயத்திற்கு கிறிஸ்தவ பங்களிப்புகளை பாதுகாக்கிறது. தன்னார்வலர்கள், இறையியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் நடத்தப்படும் கிறிஸ்தவ வரலாற்று சங்கம். கடந்த மூன்று வருடங்களாக நமது சமூகம் கள ஆய்வு, டிஜிட்டல் மயமாக்கல், மல்டிமீடியா போட்காஸ்டிங், இந்திய கிறிஸ்தவம் மற்றும் கடவுளின் ராஜ்ஜியத்தின் நன்மைக்காக சமூக ஊடகப் பிரகடனம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செய்துள்ளது. குறிப்பாக வருங்கால கிறிஸ்தவ சந்ததியினரை மேம்படுத்துவதற்காக, நமது சமூகம் "கிறிஸ்தவ வரலாற்று சுவடுகள்" என்ற கிறிஸ்தவ வரலாற்று ஆய்வு இதழை வெளியிடுகிறது. கிறிஸ்தவ அறிவின் செறிவூட்டல் மற்றும் ஈடுபாட்டிற்காக, கிறிஸ்தவ வரலாற்று சங்கம் பழைய கிறிஸ்தவ புத்தகங்களை மீண்டும் வெளியிடுகிறது.

Read More...

Achievements

+7 more
View All