Share this book with your friends

Karaiyora Naanalgal / கரையோர நாணல்கள் The Desert Land

Author Name: Bo.manivannan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒவ்வொரு படைப்பாளியின் எழுத்தும் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும்  சமூகத்தின் நாட்குறிப்புகளே ஆகும். எழுத்தாளனது  ஆன்மாவின் உயிர்  எழுத்துக்கள், பிரபஞ்சத்தின் உயில் எழுத்துக்கள்.

 இந்த குறுநாவலின் சாளரத்தின் வழியே வாழ்வின் பெருவெளியை தரிசிக்க வைத்திருக்கிறார். 

 பின்னணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து  காட்சியனுபவங்களை கண்ணெதிரில் நிறுத்தியிருக்கிறார். நிறை, குறை, பகை, பழி, அன்பு, காதல், பாசம், கோபம் இப்படி எல்லா உணர்வுடைய கதாபாத்திரங்களை இந்தப் புதினத்தின் கதைப்பின்னலோடு மிக இயல்பாக உலவவிட்டிருக்கிறார். 

 மனசாட்சியின் குரல் இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒலிப்பதை நீங்கள் செவிமடுக்கலாம். வாசகர்களின் மனதிற்கு நெருக்கமான புதினமாக இந்த நூல் திகழ்கிறது.

எதிர்பார்ப்புகள் – ஏமாற்றங்கள் – தவறுகள் - சறுக்கல்கள் இல்லாத வாழ்க்கையே கிடையாது. இவற்றிற்கு இன்னொரு பெயர் ‘அனுபவம்’.  கதையில் வரும் பிரதான பாத்திரமான ‘ராஜு’வானாலும் கதைக்குள் கதையாக வரும் (The Desolate Aspiration) அரவிந்த் ஆனாலும் இவற்றையெல்லாம் எதிர் கொள்ளும் சராசரி மனிதர்களாக புனையப்பட்டிருப்பது படிக்கும் வாசகர் மன நிலைக்கு  நெருக்கமாக இருக்கிறது.  கதை சூழலின் தேவைக்கேற்ப ஆங்காங்கே கவிதை வரிகளின் பிரயோகம் வாசகர் உணர்வின் உந்துதலை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில் அமைந்துள்ளது. 

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

போ.மணிவண்ணன்

இன்றைய தமிழ்ச் சூழலில் தற்கால இலக்கிய ஆளுமைகளில் தனித்தன்மை வாய்ந்த படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர் இவர். போ.மணிவண்ணன் என்ற இயற்பெயரில் இதுவரையில் பதினான்கு நூல்களை எழுதியுள்ளார். அடிப்படையில் அரசு கல்லூரி்யில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் கவிதை, நாவல், திறனாய்வு, மீட்டுருவாக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு முதலான தளங்களில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கும்  இவர் இதுவரையில் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இவரது கவிதைகள் பல  கல்வி நிறுவனங்களின்  பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கேரள அரசின் பாடத்திட்டத்தில் இவரது கவிதைகள் வைக்கப்பட்டுள்ளன. கலை இலக்கிய பங்களிப்பிற்காக பல விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய  ' வெண் தரிசு நிலம் ' என்ற நாவல். 2022 ஆம் ஆண்டிற்கான  ' இண்டியா புக் ஆஃப் ரிக்கார்ட் ' விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்  தொடர்ந்து சூழலியலுக்காக தன் படைப்பின் மூலம் தீவிரமாக  குரல்கொடுத்து வருகிறார்.மொத்தத்தில் இவர் ஒரு பன்முகப் படைப்பாளி.

Read More...

Achievements

+6 more
View All