Share this book with your friends

Karttharukku Sittham / கர்த்தருக்குச் சித்தம்

Author Name: Rev. Dr. A. Pragasam | Format: Hardcover | Genre : Religion & Spirituality | Other Details

“கர்த்தருக்குச் சித்தம்,” என்ற தலைப்பினை வைத்து, Rev. Dr. A. பிரகாசம் ஐயா அவர்கள், உங்களுக்குச் சில ஆழ்ந்த எண்ணங்களைப் பகிர்ந்துக் கொடுத்ததை தொகுத்து வழங்க எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்திற்காக, நம் தேவாதி தேவனையும், கர்த்தாதி கர்த்தரையும் ஸ்தோத்தரிக்கிறேன். நம் வாழ்வின் ஒவ்வொரு நினைவும், செயலும், கர்த்தரின் சித்தத்திற்குக் கீழ் இயங்கும் போது மட்டுமே, நாம் உண்மையான திசையில் பயணிக்கிறோம் என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். 

நாம் கர்த்தரின் சித்தத்தில் நடக்கும் போது மட்டுமே உண்மையான நல்வாழ்வைக் காணலாம். கர்த்தரின் சித்தம் நம் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்று ஜெபித்து, அவர் மேல் உண்மையான விசுவாசம் வைத்து, அவர் காட்டும் வழியில் நடந்து, அவர் நமக்காக வைத்திருக்கும் சிறந்த திட்டத்தை அனுபவிக்க, செயல்படடும் போது, நிச்சயமாக ஜீவக் கிரீடத்தைப் பெற்றுக் கொள்வோம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. Rev. Dr. A. பிரகாசம் ஐயா அவர்களின் ” கர்த்தருக்குச் சித்தம்”  என்ற இந்த புத்தகம் கர்த்தரின் சித்தம் என்னவென்று புரிய வைத்து, உங்கள் மனக் கண்களைத் திறந்து, சீர்படுத்தி நல்வழிப்படுத்தும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று. இதை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாததால், நீங்கள் பெற்ற ஆசீர்வாதத்தை, மற்றவர்களும் அடையும்படி, இதை அனேகருக்குப் பகிர்ந்து, உங்களால் முடிந்த வரை தேவனுக்கென்று ஒரு சிறிய ஊழியத்தை இங்கிருந்து துவங்க உங்களை அன்போடு அழைக்கிறேன். கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக  இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

Rev. ஆலிஸ் நிர்மலா 

Read More...
Hardcover
Hardcover 480

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Rev. Dr. ஆ. பிரகாசம்

ஆகஸ்ட் 5, 1940, இராஜபாளையத்திலிருந்து, தெங்காசி செல்லும் வழியில், 6 கி.மீ. தூரத்திலுள்ள கிராமம், சுந்தரநாச்சியார் புரத்தில் இவர், பிறந்ததாக சான்றிதழ் சொல்கிறது. கிராமத்தில் 8-வது வகுப்பு வரை அரசாங்கப் பள்ளியில் படித்து, தேர்ச்சிப் பெற்று, தொடர்ந்து படிப்பதற்காக இராஜபாளையத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நடந்துச் சென்று, 9-11ம் வகுப்பு வரை படித்தார். அதன் பின், Palayamkottai St. Xavier’s College, பாளையங்கோட்டை, சவேரியார் கல்லூரியில்) B.Sc., B.T. படித்தார். 34 ஆண்டுகளாக அரசாங்க ஆசிரியராக பணிப் புரிந்தார். அந்தப் பணிக் காலம் முடியும் 2½ ஆண்டுகளிக்கு முன்பாகவே அவர் விருப்ப ஓய்வு பெற்று, சில ஆண்டுகள் வேத ஆராய்ச்சி செய்து, டாக்டர் பட்டம் பெற்று, போதகரானார். 

அவர் பள்ளியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள், “பிரகாசமே! பிரகாசமே! பிரகாசமான வாழ்வுக்குத் திரும்பு,” என்று கர்த்தர் அழைத்தார். “நாள்தோறும் வேதத்தை வாசி, உன் வாழ்க்கைப் பிரகாசமாகும்,” என்ற விளக்கமும் கொடுத்தார். அன்று முதல், அவர் வாழ்க்கை பிரகாசமாக இருக்கிறது. 

அன்றிலிருந்து, கடந்த 28 ஆண்டுகளாக, அவர் தொடர்ந்து வேத ஆராய்ச்சி செய்து, புத்தகங்களும், மாதப் பத்திரிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அவருடைய செய்திகள் யூடியூப் (YouTube)லும் உள்ளன.

https://www.youtube.com/@revapragasam7555

கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்து, தேவனால் அழைக்கப்பட்டு, மறுபடி பிறந்து, போதகராய் அபிஷேகம் பண்ணப்பட்டு, இரண்டு திருச்சபைகளை ஸ்தாபித்து, அநேக ஆலயங்களிலும், போதகர் கூட்டங்களிலும் பிரசங்கித்தும், அவர்களின் கண்களைத் திறந்து, பலருக்கு ஞானஸ்நானமும் கொடுத்துள்ளார். அவருக்கு வேத ஞானத்தைக் கொடுத்து, அவற்றுக்கு விளக்கங்களைத் தந்த பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி, இயேசுவுக்கு புகழ், தேவனுக்கே மகிமை!

அவர் எழுதி, வெளியிட்டவை:

ஒபதியா
சகரியா
வாலிபர்களுக்கு
இயேசு கற்றுக் கொடுத்த ஜெபம்
கர்த்தரின் வார்த்தை எதை போன்றது
போற்றித் துதிப்போம் தேவ தேவனை
கர்த்தருக்குப் பிரியம்
48 மாதங்களில் 60 மாதாந்திரப் பத்திரிகைகள் (30 கட்டுரைகள்) 
வேதாகமத்தில் புரியாத வார்த்தைகள் (1 மற்றும் 2-ம் வெளியீடுகள்)
 

அவர் எழுதி, வெளிவர உள்ளவை:

66 புத்தங்களின் விளக்க உரை
பல கட்டுரைகள்
வேதாகமத்தில் புரியாத வார்த்தைகள் 
13,000 வார்த்தைகளுள்ள வேதாகம களஞ்சியம் (3ம் வெளியீடு)
 

பின் குறிப்பு:

அவருடைய ஜெபங்கள், கர்த்தரின் சமூகத்தை எட்டியதால், பலருக்கு பாவத்திலிருந்தும், வியாதியிலிருந்தும், பிசாசின் பிடியிலிருந்தும் விடுதலை அடைந்திருக்கிறார்கள். ஜெப உதவிக்கும், வேதாகமத்தைப் பற்றிய சந

Read More...

Achievements

+3 more
View All