You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஒரு கருப்பு உருவம் துப்பாக்கியை லோட் செய்ய மேகஸினிலிருந்து குண்டு சம்பரில் வந்து நின்றது. அவன் அவசரமாக ட்ரிகரை அழுத்த குண்டுக்கு பின்னிருக்கும் சின்ன ஹேமர் குண்டின் மேல் வேகமாக முட்டியது. முட்டிய வேகத்தால் குண்டு வெடித்து துப்பாக்கியிலிருந்து புறப்பட்டு அவன் உடம்பில் பாய்ந்தது. வெள்ளை பங்களாவிலிருந்து அந்த கருப்பு உருவம் தப்பி ஓடியது.
“ஹலோ போலீஸ் ஸ்டேஷனா?” என்றது பதட்டமான பெண்ணின் குரல்
விவேகானந்தன் கு
ஹாய் என் பேரு விவேகானந்தன். மெக்கானிக்கல் இன்ஜினீயர். மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் எழுத்துக்கள் மீது கொண்ட மோகத்தால் கதை எழுதும் ஆர்வம் தட்டியது. ஒரு கதையை சுருக்கமாகவும், தெளிவாகவும், கதாபாத்திரங்கள் மனதில் பதியும் வண்ணமும், எப்படி சொல்ல வேண்டும் என்று எனக்கு புரிய வைத்தது அவர் எழுத்துக்களே.
"லாஸ்ட் பிஸ்கட்" என்ற முதல் சிறுகதை எழுதத் தொடங்கியபோது என்ன எழுதுவது என்று தெரியவில்லை, மனதில் கதை இருந்தது ஆனால் வார்த்தைகளால் சொல்ல தெரியவில்லை. பிறகு யோசித்து தட்டுத்தடுமாறி கதையின் கடைசி வார்த்தையை முடித்தபோது கிடைத்த உற்சாகம், உலகில் எந்தப் பொருளாலும் உயிராலும் தர முடியாத ஒன்று.
கதை எழுதி முடித்த பிறகு ஒன்று புரிந்தது, "எழுத்தாளர்கள் கதைகளின் கருவி". ஒரு நல்ல கதை நல்ல முடிவை நோக்கி எழுத்தாளர்களை அழைத்து செல்லும் என்பதில் உறுதி ஏற்பட்டது.
அதே உறுதியோடு இதோ என் மூன்றாவது கதை – “கில்லர் ஆன் டியூட்டி”
என் முதல் இரண்டு கதைகளான கிரைம் சீன் மற்றும் கீடோன் அமேசானில் இ -புக்காக இருக்கிறது. படித்து பாருங்கள்.
The items in your Cart will be deleted, click ok to proceed.