Share this book with your friends

Mann serum Mazhaithuli / மண் சேரும் மழைத்துளி

Author Name: Rubavathy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

திரவியா நாம் கதையின் நாயகி, தன் மூன்று வயதில் இந்தியாவை விட்டு தன் பெற்றோருடன் கனடா சென்ற
திரவியா, பல வருடங்களுக்கு பிறகு, தன் தந்தையின் காதல் திருமணத்தால் பிரிந்த தன் குடும்ப உறவுகளை
தேடி தன்‌ தாய்நாட்டில் அடியெடுத்து வைக்கிறாள். தன் தாய், தந்தை பிறந்த ஊருக்கு செல்லும் தியாவை
அவளின்‌ தந்தையின் குடும்பம் ஏற்றுக் கொண்டார்களா? காதல் திருமணம் செய்த தன் மகன் மீது கோபத்தில்
இருக்கும் தியாவின் தாத்தா, அவளை தன் பேத்தியாக ஏற்பாரா? தியாவை சின்ன வயதில் இருந்து காதலிக்கும்
அவள் மாமன் மகன் அகரனை காதலிக்க தொடங்கும் தியாவின் காதல் கல்யாணத்தில் முடிந்தா? தவறான
புரிதலில் தியாவின் மனதை சுக்குநூறாக உடைத்த அகரனை தியா மன்னித்து மணமுடிப்பாளா? சிறுவயதில்
இருந்து தன் மாமன் மகனை காதலிக்கும் தியாவின் சித்தப்பா மகள் அரும்பு, தியாவின் காதலுக்கு தடையாக
நிற்பாளா? பலவருடங்களுக்கு பிறகு கிடைத்த உறவுகளை கொண்டாடி தீர்க்கும் முன் தன் சின்ன வயது
தோழன் விஷ்வாவின் சதியால் தன் குடும்பத்தை விட்டும், வீட்டை விட்டும் மீண்டும் வெளியேறும் தியா
மீண்டும் தன் சொந்தங்களுடன் இணைந்தாளா? இத்தனை வருடங்களாக தியாவின் தாய், தந்தை ஏன்
சொந்தங்களை சந்திக்காதது ஏன்? தியாவுடன் அவர்கள் ஏன் இந்தியா வரவில்லை. அப்படி என்னதான்
கோவம் அவர்களுக்கு தன் குடும்பத்தின் மீது? இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை இந்த கதையில்...

Read More...
Paperback
Paperback 155

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரூபாவதி

இது ஒரு சாதாரணப் பெண்ணின் முதல் முயற்சி. அவர் யார் என்பதை அவருக்கும் இந்த உலகிற்கும் காட்ட
இது அவரின் முதல் படி.

ரூபாவதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

தன் தாய் மொழியாம் தமிழ் மொழியின் துணைக்கொண்டு தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர்.
எழுதுவதைப் பொழுதுபோக்காக இல்லாமல், தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு வழியாக
ஏற்றுக்கொண்டவர்.

இவர் கதைகள் பொதுவாகக் குடும்பக் கதைகளாக இருக்கும். அழுத்தமாக, ஆழமான காதலோடு நட்பு,
உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும்படி இருக்கும். கதைக்கு தேவை எனும்போது மட்டுமே கொஞ்ச
வில்லத்தனம் வரும். மற்றபடி எங்கும் தேவையில்லாத எதிர்மறை கதாப்பாத்திரங்கள், வில்லன், வில்லிகள்

வரமாட்டார்கள். முக்கியமாக காதலை கண்ணியமாக எழுதும் விதம் இவர் கதைகளின் தனி அழகு. குறிப்பாகக்
கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும், படிக்கும் பெண்கள்
தங்களை அந்த இடத்தில் பொருத்திப் பார்த்து வியக்கும் படியும் இருக்கும். இவர் கதைகளில் எந்த இடத்திலும்
வன்முறையே, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்களோ இருக்காது. படிக்கும்போது இதமாக மனதை வருடும்
படி இருக்கும் கதை, சில நேரம் கண்களை லேசாகக் நனையவும் வைக்கும். காதல், நட்பு, உறவுகளோடு
இயல்பான நகைச்சுவை கதையில் கலந்து இழையோடி உங்களைச் சிரிக்கவும் வைக்கும்.
ஒரு நாளில் உங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை கொஞ்சம் படிக்கச் செலவு செய்ய நீங்கள் தயார் என்றால்
இவரின் கதையை முயன்று பாருங்கள்.
நிச்சயமாக உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது.

Read More...

Achievements