Share this book with your friends

Neyveli Kathaikal / நெய்வேலிக் கதைகள்

Author Name: Amaruvi Devanathan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

‘உயிர்ப்பும், விகற்பமில்லா இளமையும் கலந்து  ததும்பும்  இந்தக் கதைகளில் எதிர்கால சந்ததிகளுக்குத் தரக்கூடிய  துள்ளலான அரிய பள்ளிக்கால அனுபவப் பொக்கிஷங்கள்  உள்ளன.  ஒவ்வொரு கதையும் நல்முத்து.  மனிதன் மாற்றங்களை அதிவேகமாய் ஏற்று முன்னகரும் இந்த யுகத்தில், அவ்வனுபவங்கள் திரும்ப வந்தாலுமே முன்புபோல இருக்குமா என்ற சந்தேகங்கள் நமக்கு இருப்பதை மறுக்கமுடியாது. ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும், வளரும் சிறார் உள்ள இல்லத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய சிறந்த ஆவணத் தொகுப்பு இது.  பிள்ளைகளில் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க இந்தப்புத்தகம் கண்டிப்பாக உதவும்.  'கோவிட்19’ காலத்தில் தவிர்க்க முடியாதவாறு  இணையவெளியில் நடந்த கல்வி ஆண்டுக்குப் பிறகோ இந்நூலின் முக்கியத்துவம் பன்மடங்காகிறது’ – விருதுகள் பல பெற்ற ‘Dangling Gandhi’ நூலாசிரியர் ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.

Read More...
Paperback
Paperback 305

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆமருவி தேவநாதன்

ஆமருவி தேவநாதன் 'பழைய கணக்கு' சிறுகதைத் தொகுப்பு  மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அத்தொகுப்பில் இடம்பெற்ற 'ஸார் வீட்டுக்குப் போகணும்' சிறுகதை, பாரத மனிதவள அமைச்சின் தேசிய புத்தக நிறுவனத்தின்  'சிறந்த 25 கதைகள்' வரிசையில் இடம்பெற்றது.   அவரது 'நான் இராமானுசன்'  நூல் தத்துவ விவாதங்களைப் பெரிதும் கிளப்பிப் பரவலான வரவேற்பைப் பெற்றது. 'Monday is not Tuesday', 'Singapore Diary' என இரு ஆங்கில நூல்களை எழுதியுள்ள இவரது ஐந்தாவது நூல் 'நெய்வேலிக் கதைகள்'. 

 பன்னாட்டு வங்கியில் மென்பொருள் கட்டமைப்பாளராகப்  பணிபுரியும் ஆமருவி, சிங்கப்பூரில் இருந்து குடிபெயர்ந்து தற்போது  சென்னையில் வசிக்கிறார்.

மின் அஞ்சல்:  amaruvi@gmail.com

ஃபேஸ்புக் : facebook.com/amaruvidevanathan

ட்விட்டர் : twitter.com/amaruvi

வலைத்தளம்: www.amaruvi.in

Read More...

Achievements

+1 more
View All