Share this book with your friends

Ragasiya Aakramippu / ரகசிய ஆக்கிரமிப்பு

Author Name: Subha | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

‘ஈகிள்ஸ் ஐ’ நரேந்திரனிடம் சுகிதா என்ற இளம்பெண் ஒருநாள் நள்ளிரவில் வழக்கு ஒன்றைக் கொண்டு வருகிறாள். அதன்படி சமீபத்தில் அவளது வாழ்வில் அவளை அறியாமலே விநோதமான சம்பவங்கள் நடப்பதாகவும், இரவுகளில் தான் வேறொரு நபர்போல நடந்துகொள்வதாகவும் தெரிவிக்கிறாள். எனவே, தன்னைப் பின்தொடர்ந்து உண்மையைக் கண்டறியுமாறு வேண்டுகிறாள். அதை ஏற்றுக் களமிறங்கும் நரேனுக்கு, அவளுக்குள் ஒளிந்திருக்கும் ‘ஜான்சி’ என்ற மர்மப் பெண் குறித்த விவரங்களும், சுகிதாவின் காதலன் சந்தோஷை அவள் கொன்ற சம்பவங்களும் தெரியவருகின்றன. ஒருகட்டத்தில், நரேனையே கொல்லத் துணியும் சுகிதா எனும் ஜான்சியிடமிருந்து நரேன், வைஜெயந்தி தப்புவார்களா?

Read More...
Paperback
Paperback 275

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுபா

டி.சுரேஷ், ஏ.என்.பாலகிருஷ்ணன் இருவரும் தங்களுடைய முதல் எழுத்தைச் சேர்த்து சூடிக்கொண்ட பெயர் சுபா. துப்பறியும் நாவல்கள், சிறுகதைகள், திரைக்கதை, வசனம் என இவர்கள் களமிறங்கிய ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்தவர்கள். இவ்விரு நண்பர்களும் கல்லூரிக்காலத்திலிருந்து சேர்ந்து எழுதிவருகின்றனர். சுமார் 500 நாவல்களையும், 450-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 80க்கும் மேற்பட்ட தொடர்களையும், 20-க்கும் மேற்பட்ட திரைக்கதைகளையும் எழுதியிருக்கிறார்கள். ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘அநேகன்’ ஆகிய திரைப்படங்கள், சுபாவின் நாவல்களைத் தழுவியவை.இவர்களின் பெரும்பாலான நாவல்களில் ஈகிள்ஸ் ஐ டிடெக்டிவ் ஏஜென்சியின் நரேந்திரன், வைஜயந்தி கதாபாத்திரங்கள் முதன்மைப் படுத்தப்பட்டிருக்கும். ஜான்சுந்தர், செல்வா, முருகேசன் ஆகியவையும் இவர்கள் உருவாக்கிய முக்கிய கதாபாத்திரங்கள்.

Read More...

Achievements

+1 more
View All