Share this book with your friends

SATTATHIN PADI.. / சட்டத்தின் படி..

Author Name: Sundara Kangaraj | Format: Paperback | Genre : Others | Other Details

காணும் இடங்களிலெல்லாம் சக்தியடா என்பார் பாரதி. பெண் என்பவள் தெய்வம் என்கின்றனர் பெரியவர்கள். ஒரு பெண் நினைத்தால் ஒருவனுக்கு சிறகு பொருத்தி சிகரம் ஏற்றவும் முடியும். அதே சமயம் சிதைத்து சின்னாபின்னமாக்கவும் முடியும். திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணராத பல பெண்கள் யாரோ சொல்வதற்காக, தன் வாழ்க்கையை விவாகரத்துக்கு பலிக் கொடுக்கும் பெரும் தவறை செய்வது, தன் தலையில் மண்ணை வாரி இறைப்பதற்கு சமம். அதற்குப் பிறகு அந்த பெண்களின் வாழ்க்கை, புயலில் பறக்கும் புழுதியாய் மாறுவது என்பதுதான் நிதர்சனம். விவாகரத்தை நோக்கி சென்ற எந்த பெண்ணும் தன் வாழ்க்கையின் ஒரு அடையாளத்தை இழந்துதான் நிற்கிறார்கள். தாம்பத்ய வாழ்க்கையின் அர்த்தத்தை அறியாமல், அவசரப்பட்டு எடுக்கும் பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது. பொறுமையின்றி வாழக்கூடிய வாழ்க்கையில் கிடைப்பது என்பதைவிட, இழப்பதே அதிகம் என்பதை இந்த நாவல் சொல்லும்.
பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஆறாவது புலம் பொறுமை என்பதுதான். அந்த சகிப்புத்தன்மையும், அது கொடுக்கும் நம்பிக்கையுமே சுக வாழ்க்கையின் அஸ்திவாரம். இதுவும் கடந்து போகும், பொறுமை இருந்தால் என்பதே இந்நாவலின் மையக்கரு.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுந்தர. கனகராஜ்

கதையாசிரியர், வசனகர்த்தா மற்றும் கவிஞர் என பலமுகங்களைக் கொண்ட இவர், யதார்த்த விசயங்களையும், சமூக அவலங்களையும் தன் எழுத்துக்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். இந்த கதை, சாமனியர்களின் கதை. ஏழைகளின் கண்ணீரை சொட்டுச்சொட்டாய் பக்கம் நின்று சேகரித்திருக்கிறார். ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும், ஒளிந்து நின்று வாசகன் மேல் வெடிகுண்டை வீசுகிறார். பதட்டம், பரிதவிப்பு, சிருங்காரம் என உணர்ச்சிக் குவியலில் வாசகனை திக்குமுக்காட செய்கிறார். கடைசி அத்தியாயம் நெருங்க நெருங்க, திக் திக் என குலுங்கி நிமிர்கிறது படிக்கின்றவர்களின் இதயம். இது நாவல் மட்டுமல்ல, பாடம்.

Read More...

Achievements