Share this book with your friends

sindanai sidaral / சிந்தனைச் சிதறல்

Author Name: Anupama Srinivasan | Format: Paperback | Genre : Poetry | Other Details

வடமொழி கற்றாலும் தமிழ் மொழி மீது தீரா காதல் கொண்ட அனுபமா சீனிவாசன் அவர்களின் இந்த கவிதை தொகுப்பு  வரவேற்கப்பட வேண்டியது. எந்தவித ஆரவாரமும் இன்றி ,வார்த்தை ஜாலம் அதிகம் இன்றி உள்ளத்தில் உள்ளதை வெள்ளை தாளில் வார்த்தைகளாய் வடித்துள்ளார்.

குழந்தையின் சிரிப்பை பூக்களாய், பேச்சை இசையாய் கேட்கும் இவருக்கு கம்பன் பாரதி எழுதுவது மட்டுமல்ல கவிதை, குழந்தையின் அழகும் கவிதை தான் என்பது கவிதைக்கு உண்மைதான் அழகு என்பதை உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

“போர் பந்தரில் பிறந்தாலும்

போரை எதிர்த்தவனே”  

காந்தியை பற்றி பல கவிதைகள் வந்து இருந்தாலும் போர் பந்தரையும் போரையும் யாரும் ஒப்புமைப்படுத்தி எழுதியதில்லை. அந்த வகையில் அனுபமா அவர்களின் இந்த வரிகள் பாராட்டுக்குரியது.

புத்தாண்டை பற்றி இவர் எழுதியிருக்க கூடிய கவிதை நம்பிக்கையை விதைக்க கூடிய கவிதை 

சராசரி மனிதனுக்கு 

வருடத்திற்கு 

ஒரு முறை புத்தாண்டு 

சாதிக்க பிறந்தவனுக்கு 

ஒவ்வொரு நாளும் புத்தாண்டே

புத்தாண்டை வரவேற்பது போலவே இவரது கவிதையும் நாம் வரவேற்க வேண்டும்.

சில ஹைக்கூ கவிதைகளை எழுத முயற்சித்து இருக்கிறார். இவரின் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். தமிழகத்தின் பெண் கவிஞர்கள் வரிசையில் இந்த புத்தகத்தின் வாயிலாக தடம் பதிக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எழுதுங்கள் தோழி, இன்னும் நிறைய எழுதுங்கள், எழுதுவது என்பது ,மை தீர்வது மட்டுமல்ல மனதின் குறைகள் தீர்வதும் கூட..

கவிஞர்.ஆ ஜான் தன்ராஜ்,

சென்னை, 3-4-2023.     

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அனுபமா சீனிவாசன்

எனது பள்ளிப்படிப்பு தமிழ் வழி மூலம் நடந்ததால் மொழிகளின் மீது காதல் வளர்ந்தது . இதுவே என்னை வடமொழி கற்கத்  தூண்டியது. ஒரு பள்ளியில் மொழி ஆசிரியராக பணியாற்றும் போது கவிதையின் மீது காதல் விழுந்தது . இதுவே கவிதை எழுதத் தூண்டியது . நான் தினமும் பார்த்து ரசித்த நிகழ்வுகளை கவிதைகளாக எழுதியுள்ளேன்.

அனுபமா சீனிவாசன்

Read More...

Achievements