Share this book with your friends

Sindhuveli! Sinauli! Samama? Sammadhama? / சிந்துவெளி! சினௌலி! சமமா? சம்மதமா? கிமு 2000 - கிமு 1900 / BC 2000 - BC 1900

Author Name: Premnath Mohan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கி.மு. 2000 - சிந்துநதி நகரங்களான 'மொகெஞ்சதாரோ' மற்றும் 'ஹரப்பா' நகரங்கள் வீழ்ந்த அதேகாலக்கட்டத்தில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ‘சினௌலி’ (Sinauli) எனப்படும் இடத்தில் போர்நடக்கிறது. 'இருக்கு வேதத்தில்’ சொல்லப்படும் 'பத்து மன்னர்களின் போர்' (Battle of Ten Kings) இறுதியாக யமுனை ஆற்றுப் படுகையில் முடிகிறது. இவ்விரண்டுக்குமான தொடர்பு என்ன? இதன் பிறகு ஆரம்பமாகும் வேத காலத்திற்கும் தற்போதைய இந்தியாவின் வடக்குப் பிராந்தியத்தில் பேசப்பட்ட தமிழ் மொழித் திரிபுக்கும் உள்ள தொடர்பு என்ன? அரசன் சுதாசன் மற்றும் வசிஷ்டர் எதிர்கொண்ட நாகர்கள் யார்? 'பசுபதி இலச்சினையில்' (Pashupathi Seal) காணப்படும் பாண்டிய மன்னன் யார்?  மகாபாரதத்தில் புனையப்பட்ட கதாபாத்திரங்களின் மூதாதையர்கள் யார்? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஒருவனிடத்தில் மட்டுமே பதில் உண்டு. அவனே கபாடபுரத்தின் தளபதி, நெடுஞ்செழியன்.

Read More...
Paperback
Paperback 420

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரேம்நாத் மோகன்

சென்னை கொளத்தூரில் பிறந்து, வளர்ந்து, பட்டப் படிப்பை முடித்த 'பிரேம்நாத் மோகன்' ஏழு ஆண்டுகள் வணிகக்கப்பல் துறையில் (Merchant Navy) பணியாற்றியவர். உலகின் பல்வேறு கடல்களில் பல விதமான கப்பல்களில் பயணித்த அவர், 3 ஆகஸ்ட் 2014 அன்று, லிபியாவிற்கு அருகிலுள்ள மத்தியத்தரைக்கடலில் (Mediterranean Sea) தத்தளித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 87 உயிர்களைக் தேடி மீட்டெடுத்த 'SAR' (Search & Rescue Operation) அரும்பணிக்கு வித்திட்டவர். கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ்(Robotics) கல்வியைப் பயிற்றுவித்த அவர் தமிழர்களின் வரலாற்றில் மலம் அள்ளும் எனும் தீண்டாமை தொழில் எப்பொழுது உருவெடுத்திருக்கும் என்ற ஆராய்ச்சியைத் தொடங்கினார். அதன் விளைவு.........! அவருடைய ஆராய்ச்சி நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்றன.

Read More...

Achievements